தமிழ்நாடு

தமிழகத்தில் இன்று மேலும் 1,668 பேருக்கு கரோனா

தமிழகத்தில் இன்று மேலும் 1,668 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

DIN

தமிழகத்தில் இன்று மேலும் 1,668 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து மக்கள்நல்வாழ்வுத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், கடந்த 24 மணிநேரேத்தில் 1,63,177 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. அவற்றில் புதிதாக 1,668 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 
அதிகபட்சமாக கோவையில் 199 பேருக்கும், சென்னையில் 185 பேருக்கும், ஈரோட்டில் 158 பேருக்கும் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 25,97,603ஆக உயர்ந்துள்ளது. இதனிடையே, மேலும் 1,887 போ் கரோனாவிலிருந்து விடுபட்டு வீடு திரும்பியுள்ளனா். 

இதனால் இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 25 லட்சத்து 43,319-ஆக அதிகரித்துள்ளது. மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் தற்போது மருத்துவக் கண்காணிப்பில் 19,621 போ் உள்ளதாக சுகாதாரத் துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 
தமிழகத்தில் கரோனா பாதிப்புக்குள்ளாகி மேலும் 24 போ் பலியாகியதை அடுத்து நோய்த் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 34,663-ஆக அதிகரித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எதிர்க்கட்சியின் போராட்டத்தில் காயமடைந்த கேரள அமைச்சர் மருத்துவமனையில் அனுமதி!

பாரிஜாதம் தொடரின் புதிய நாயகன் அக்‌ஷய் கமல்!

நல்லகண்ணு மறைவு: குடியரசு துணைத் தலைவர் இரங்கல்!

அக்‌ஷர் படேல் பிளேயிங் லெவனில் இடம்பெற வேண்டும்: ரவி சாஸ்திரி

தனக்கென வாழாமல் பிறர்க்கென வாழ்ந்த சிறந்த பண்பாளர் நல்லகண்ணு: இபிஎஸ் இரங்கல்

SCROLL FOR NEXT