தமிழ்நாடு

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கையைத் தொடங்க உத்தரவு

DIN

தமிழ்நாட்டில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கையைத் தொடங்குவதற்கான பணிகளை மேற்கொள்ள கல்லூரிக் கல்வி இயக்ககம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கரோனா தொற்று பரவல் காரணமாக 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில் மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில் கல்லூரிக் கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் தமிழ்நாடு முழுவதும் உள்ள 143 அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கையை ஆகஸ்ட் 23ஆம் தேதி முதல் தொடங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆன்லைன் முறையிலும் கலந்தாய்வை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில் செப்டம்பர் 3ஆம் தேதிக்குள் இப்பணிகளை முடிக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் 10.5 சதவிகிதம் வன்னியர் இடஒதுக்கீடு முறையையும் பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. 12ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் மற்றும் இதர சான்றிதழ்களை நிறைவு பின்னரே சேர்க்கையை இறுதி செய்யவும் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மறுவெளியீட்டில் அசத்தும் கில்லி: அஜித்தின் 3 படங்கள் இணைந்தும் குறைவான வசூல்!

இந்தியாவில் 2 கோடி கணக்குகளை நீக்கியது வாட்ஸ்ஆப்

அதே அரண்மனை! நம்பர் மட்டும் வேறு! : அரண்மனை - 4 திரைவிமர்சனம்!

அதிக விக்கெட்டுகள்: தமிழக வீரர் நடராஜன் முதலிடம்!

ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி பலி: விசாரணைக்கு ரயில்வே உத்தரவு

SCROLL FOR NEXT