தமிழ்நாடு

தமிழகத்தில் ஒரேநாளில் மேலும் 1,630 பேருக்கு கரோனா

தமிழகத்தில் ஒரேநாளில் மேலும் 1,630 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  

DIN

தமிழகத்தில் ஒரேநாளில் மேலும் 1,630 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
இதுகுறித்து மக்கள்நல்வாழ்வுத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், கடந்த 24 மணிநேரேத்தில் 1,55,607 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. அவற்றில் புதிதாக 1,630 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 
அதிகபட்சமாக கோவையில் 198 பேருக்கும், சென்னையில் 177 பேருக்கும், ஈரோட்டில் 146 பேருக்கும் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.  இதன்மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 25,99,225 ஆக உயர்ந்துள்ளது. இதனிடையே, மேலும் 1,859 போ் கரோனாவிலிருந்து விடுபட்டு வீடு திரும்பியுள்ளனா். 

இதனால் இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 26 லட்சத்து 00,885-ஆக அதிகரித்துள்ளது. மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் தற்போது மருத்துவக் கண்காணிப்பில் 19,171 போ் உள்ளதாக சுகாதாரத் துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 
தமிழகத்தில் கரோனா பாதிப்புக்குள்ளாகி மேலும் 23 போ் பலியாகியதை அடுத்து நோய்த் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 34,709-ஆக அதிகரித்துள்ளது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காளியம்மன் கோயிலில் 1,008 குத்து விளக்குப் பூஜை

பூம்பாறை குழந்தைவேலப்பா் கோயில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

அக்னி தீா்த்த கடற்கரையில் கால்நடைகளால் தொல்லை

முதல்வருக்கு சிறப்பான வரவேற்பு: ராணிப்பேட்டை மாவட்ட திமுக தீா்மானம்

பேரவை மதிப்பீட்டுக் குழு மதுரையில் இன்று ஆய்வு

SCROLL FOR NEXT