தனக்கு வழிகாட்டியாக இருப்பவர் துரைமுருகன்: முதல்வர் பாராட்டு 
தமிழ்நாடு

தனக்கு வழிகாட்டியாக இருப்பவர் துரைமுருகன்: முதல்வர் பாராட்டு

100 ஆண்டுகள் பெருமைமிக்க அவையின் 50 ஆண்டு கால உறுப்பினராக இருக்கிறார் துரைமுருகன் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பாராட்டினார்.

DIN

100 ஆண்டுகள் பெருமைமிக்க அவையின் 50 ஆண்டு கால உறுப்பினராக இருக்கிறார் துரைமுருகன் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பாராட்டினார்.

பேரவையில் முதலாவது நீர்வளத்துறை மானிய கோரிக்கை நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே, தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் இன்று, தமிழக அமைச்சர் துரைமுருகனுக்கு பாராட்டு தீர்மானத்தை முன்மொழிந்து முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது, கட்சிக்கும் ஆட்சிக்கும் உறுதுணையாக இருப்பவர் துரைமுருகன். சட்டப்பேரவையில் சிரிப்பலையை ஏற்படுத்தக் கூடியவர் துரைமுருகன், அழவைக்கவும் அவரால் முடியும். கருணாநிதி, அன்பழகன் இழப்புக்குப் பிறகு அவர்களது இடத்தில் துரைமுருகனை வைத்துப் பார்க்கிறேன். கருணாநிதியின் அருகில் மட்டுமல்ல, அவரது மனதிலும் ஆசனம்போட்டு உட்கார்ந்திருப்பவர் துரைமுருகன்.

துரைமுருகனுடன் கருணாநிதி பேசிக் கொண்டே இருப்பதைப் பார்க்க பொறாமையாக இருக்கும்.

இளம் நடிகை ஐஸ்வர்யா போட்டோஷூட் பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.

மனதில் பட்டத்தை உறுதியுடன் சொல்லக்கூடியவர். எந்தத் துறையைக் கொடுத்தாலும் சிறப்புடன் செயல்படக் கூடியவர். இந்தக் கூட்டத்தை அழ வைக்க நினைத்தால் அழ வைப்பார், சிரிக்க வைக்க நினைத்தால் சிரிக்க வைப்பார்.

382வது சென்னை தினம் - புகைப்படங்களை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.

50 ஆண்டு காலம் சட்டமன்ற உறப்பினராக இருந்து பொன் விழா நாயகனாக இருக்கிறார் துரைமுருகன். எனக்கு வழிகாட்டியாக இருப்பவர் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் பாராட்டு தெரிவித்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாலை மறியல் ஈடுபட்ட கிராம ஊழியா் சங்கத்தினா் 80 போ் கைது

கே. என். நேரு வென்ற தொகுதியில் 42 ஆயிரம் போ் நீக்கம்

இரட்டை பிரபை வாகனத்தில் நம்பெருமாள்

திருமணமான 3 நாளில் பெண் தூக்கிட்டுத் தற்கொலை

மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்

SCROLL FOR NEXT