புதிதாக தரம் உயர்த்தப்பட்ட மாநகராட்சிகள், நகராட்சிகள்(முழுப் பட்டியல்)
புதிதாக தரம் உயர்த்தப்பட்ட மாநகராட்சி மற்றும் நகராட்சிகளின் பட்டியலை பேரவையில் அமைச்சர் கே.என். நேரு செவ்வாய்க்கிழமை வெளியிட்டார்.
புதிதாக தரம் உயர்த்தப்பட்ட மாநகராட்சி மற்றும் நகராட்சிகளின் பட்டியலை பேரவையில் அமைச்சர் கே.என். நேரு செவ்வாய்க்கிழமை வெளியிட்டார்.
புதிய மாநகராட்சிகள்
தாம்பரம், பல்லாவரம், செம்பாக்கம், பம்மல், அனாகாபுத்தூர் ஆகிய நகராட்சிகல் மற்றும் அதனைச் சுற்றி அமைந்துள்ள பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகளையும் ஒன்றிணைந்து ஒரு மாநகராட்சியாக அமைக்கப்படும்.
மேலும், காஞ்சிபுரம், கும்பகோணம், கரூர், கடலூர் மற்றும் சிவகாசி ஆகிய நகராட்சிகள் அதனைச் சுற்றி வளர்ச்சி அடைந்துள்ள உள்ளாட்சி அமைப்புகளை ஒன்றிணைத்து மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்படும்.
புதிய நகராட்சிகள்
பள்ளப்பட்டி, திட்டக்குடிம் மாங்காடு, குன்றத்தூர், நந்திவரம், கூடுவாஞ்சேரி, பொன்னேரி, திருநின்றவூர், சோழிங்கர், இடங்கனசாலை, தாராமங்கலம், திருமுருகன்பூண்டி, கடலூர், காரமடை, கருமத்தம்பட்டி, மதுக்கரை, வடலூர், கோட்டக்குப்பம், திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை, அதிராம்பட்டினம், மானாமதுரை, சுரண்டை, களக்காடு, திருச்செந்தூர், கொல்லன்கோடு, முசிறி, இலாங்குடி ஆகிய பேரூராட்சிகள், அதன் அருகே வளர்ச்சியடைந்துள்ள ஊராட்சிகளை ஒன்றிணைத்து நகராட்சிகளாக மாற்றப்படும்.
மேலும், புகளூர் மற்றும் டிஎன்பிஎல் புகளூர் பேரூராட்சிகளை இணைத்து புகளூர் நகராட்சியாக அறிவிக்கப்பட்டுள்ளது.