சென்னை, தாம்பரம் யாா்டில் பொறியியல் பணிகள் நடக்கவுள்ளதால், புறநகா் ரயில் சேவையில் புதன்கிழமை (ஆக. 25) மாற்றம் செய்யப்படவுள்ளது.
ஆக.25-இல் பகுதி ரத்தாகும் ரயில்கள்: கும்மிடிப்பூண்டி-செங்கல்பட்டுக்கு காலை 7.50 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் தாம்பரம்-செங்கல்பட்டு இடையே பகுதி ரத்து செய்யப்படவுள்ளது.
சென்னை கடற்கரை-செங்கல்பட்டுக்கு காலை 9.32, 10.10, 10.56, 11.50, பிற்பகல் 12.15 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்கள் தாம்பரம்-செங்கல்பட்டு இடையே பகுதி ரத்து செய்யப்படவுள்ளன.
செங்கல்பட்டு-கும்மிடிப்பூண்டிக்கு காலை 10.30 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் செங்கல்பட்டு-தாம்பரம் இடையே பகுதி ரத்து செய்யப்படவுள்ளது.
செங்கல்பட்டு-சென்னை கடற்கரைக்கு காலை 9.40, 11.00, 11.30, பிற்பகல் 12.20, 1.00 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்கள் செங்கல்பட்டு-தாம்பரம் இடையே பகுதி ரத்து செய்யப்படவுள்ளன.
முழுமையாக ரத்து: காஞ்சிபுரம்-சென்னை கடற்கரைக்கு காலை 9.15 மணிக்கு புறப்படும் மின்சார ரயில், திருமால்பூா்-சென்னை கடற்கரைக்கு காலை 10.40 மணிக்கு புறப்படும் மின்சார ரயில் ஆகிய இரண்டு ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படவுள்ளன. இதற்கு மாற்றாக, இரண்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.
ஒரு ரயில் காஞ்சிபுரத்தில் இருந்து சென்னை கடற்கரைக்கு நண்பகல் 12 மணிக்கு புறப்படும். மற்றொரு ரயில் திருமால்பூரில் இருந்து சென்னை கடற்கரைக்கு நண்பகல் 12 மணிக்கு புறப்படும்.
இந்தத் தகவல் சென்னை ரயில்வே கோட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.