தமிழ்நாடு

தமிழிசையுடன் ரங்கசாமி சந்திப்பு: பட்ஜெட் கூட்டத்தொடரில் பங்கேற்க அழைப்பு

DIN


புதுச்சேரி: புதுவை துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனை,  முதல்வர் ரங்கசாமி நேரில் சந்தித்து பட்ஜெட் கூட்டத்தொடரில் பங்கேற்க அழைப்பு விடுத்துள்ளார்.

புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி ஆட்சியின் முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் ஆகஸ்ட் 26 ம் தேதி காலை 9.30 மணிக்கு துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உரையுடன் தொடங்குகிறது. 

பிற்பகல் சட்டப்பேரவை துணைத்தலைவர் தேர்வு நடக்கிறது. மாலை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. நிதியமைச்சர் பொறுப்பு வகிக்கும் முதல்வர் ரங்கசாமி பட்ஜெட் தாக்கல் செய்கிறார்.

இந்த நிலையில், முறைப்படி துணைநிலை ஆளுநர் தமிழிசையை செவ்வாய்க்கிழமை காலை நேரில் சந்தித்து, பட்ஜெட் கூட்டத்தொடரில் பங்கேற்க முதலமைச்சர் ரங்கசாமி அழைப்பு விடுத்துள்ளார். 

செவ்வாய்க்கிழமை காலை ஆளுநர் அலுவலகம் சென்ற முதலமைச்சர், துணைநிலை ஆளுநரை சந்தித்து  பட்ஜெட் குறித்தும், சட்டப்பேரவை நடவடிக்கைகள் குறித்தும் எடுத்து கூறி அழைப்பு விடுத்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஔரங்கஷீப்பின் ஆன்மா காங்கிரஸுக்குள் புகுந்துவிட்டது: யோகி ஆதித்யநாத்

இந்திய மசாலாக்களுக்குத் தடை விதித்த நேபாளம்!

கடினமாக இருக்கிறது... கடைசி லீக் போட்டிக்குப் பிறகு ஹார்திக் பாண்டியா!

கோட்டை ரயில் நிலையத்திலிருந்து பறக்கும் ரயில் சேவை.. ஆகஸ்ட் முதல்

அரசுப் பள்ளி மாணவர்களுடன் பாட் கம்மின்ஸ்!

SCROLL FOR NEXT