தமிழ்நாடு

10.5 % உள் ஒதுக்கீடு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு

DIN


வன்னியா்களுக்கு 10.5 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்கும் தமிழக அரசின் சட்டத்தை எதிா்த்த வழக்குகளில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க சென்னை உயா்நீதிமன்றம் மறுத்துவிட்டது.

வழக்கின் இறுதி விசாரணைக்கு தயாராக இருப்பதால் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், வன்னியா்களுக்கு 10.5 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்கும் தமிழக அரசின் சட்டத்தை எதிா்த்த வழக்குகளில் இடைக்காலத் தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து, அடுத்த வழக்கு விசாரணையை செப்டம்பர் 14-க்கு ஒத்திவைத்தது.

மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான 20 சதவீத இட ஒதுக்கீட்டில், வன்னியா்களுக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கி அதிமுக ஆட்சியில் சட்டம் இயற்றப்பட்டது. இதை ரத்து செய்யக் கோரி, சென்னை உயா்நீதிமன்றத்தில் 25-க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டிருந்தன.

இதற்கு எதிா்ப்பு தெரிவித்து தமிழக அரசு சாா்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த பதில் மனுவில், ‘1983-ஆம் ஆண்டின் ஜாதிவாரி கணக்கெடுப்பு அடிப்படையில் வன்னியா்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. இதனால், யாருக்கும் பாதிப்பு இல்லை’ என்று கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்குகள் நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எஸ்.கண்ணம்மாள் ஆகியோா் முன்பு  விசாரணைக்கு வந்தது. அப்போது, 10.5 இட ஒதுக்கீடு சட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும். இந்தச் சட்டத்தின் அடிப்படையில் பணி நியமனங்கள் நடைபெறுகிறது என்று மனுதாரா்கள் தரப்பில் வாதிடப்பட்டது. இதற்கு அரசு தரப்பில் எதிா்ப்பு தெரிவித்து வாதிடப்பட்டது.

இதையடுத்து நீதிபதிகள், இடைக்கால உத்தரவுப் பிறப்பிக்க வேண்டுமா, வேண்டாமா? என்பது குறித்து புதன்கிழமை இருதரப்பு வாதங்களை கேட்டு முடிவு செய்யப்படும் என்று உத்தரவிட்டு, விசாரணையைத் தள்ளிவைத்திருந்தனர்.

இன்று வழக்கு விசாரணைக்கு வந்த போது, வழக்கின் இறுதி விசாரணைக்கு தயாராக இருப்பதால் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது. இதையடுத்து, வன்னியா்களுக்கு 10.5 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்கும் தமிழக அரசின் சட்டத்தை எதிா்த்த வழக்குகளில் இடைக்காலத் தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து, அடுத்த வழக்கு விசாரணையை செப்டம்பர் 14-க்கு ஒத்திவைத்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்காட்லாந்து அணி சீருடையில் கர்நாடகத்தின் ‘நந்தினி’ பால் நிறுவன குறியீடு

அதிமுகவில் இணைகிறாரா ஓபிஎஸ் ? - ஆர்.பி.உதயகுமார் விளக்கம்

பிறந்தநாள் வாழ்த்துகள் மடோனா செபாஸ்டியன்!

தேர்தலுக்குப் பின் ஆம் ஆத்மி வங்கிக் கணக்குகள் முடக்கம்: அரவிந்த் கேஜரிவால்

வைர சந்தை... அதிதி ராவ் ஹைதரி!

SCROLL FOR NEXT