9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு 
தமிழ்நாடு

9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்

தமிழகத்தில் இன்று 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

DIN

தமிழகத்தில் இன்று 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்,

வெப்பச்சலனம் காரணமாக ஆகஸ்ட் 30ஆம் தேதி வரை கனமழை தொடரவுள்ளது. இன்று தமிழகம், புதுவை மாநிலங்களில் உள்ள 9 மாவட்டங்களான செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், திண்டுக்கல், நீலகிரி, ஈரோடு, தேனி, புதுச்சேரியில் இடி, மின்னலுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 

நாளை ஆக.27-இல் செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், தேனி, திண்டுக்கல், நீலகிரி, திருவண்ணாமலை, சேலம், புதுச்சேரி பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையில் அடுத்த 48 மணிநேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

மீனவர்களுக்கு எச்சரிக்கை 

ஆகஸ்ட் 28 வரை மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதியில் 30 முதல் 40 கி.மீ.  மற்றும் ஆகஸ்ட் 30 வரை கேரள கடலோரம், லட்சத்தீவு, தென்மேற்கு, மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதியில் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திமுக ஆட்சியில் நிறையும் இருக்கு, குறையும் இருக்கு!பவர்கட் பிரச்னைக்கு தீர்வில்லை!-பிரேமலதா விஜயகாந்த்

சத்ரபதி சிவாஜி குறித்த புதிய படம்.. தடை செய்ய ஹிந்துத்துவ அமைப்பு வலியுறுத்தல்! ஏன்?

கடைசி நாளில் இங்கிலாந்து அணி பயந்துவிட்டது: இங்கிலாந்து முன்னாள் கேப்டன்

மகனாக நடித்தவரை திருமணம் செய்துகொண்ட சீரியல் நடிகை!

சிபு சோரனின் இறுதிச்சடங்கில் பங்கேற்க ராஞ்சி வந்தடைந்த ராகுல், கார்கே!

SCROLL FOR NEXT