முகப்பு
தமிழ்நாடு

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆவணித் திருவிழா கொடியேற்றம்

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி  திருக்கோயிலில் ஆவணித் திருவிழா   வெள்ளிக்கிழமை காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:00 AM
பகிர்:

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி  திருக்கோயிலில் ஆவணித் திருவிழா   வெள்ளிக்கிழமை காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

கொடியேற்றத்தை முன்னிட்டு அதிகாலை 1 மணிக்கு திருக்கோயில் நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், 3 மணிக்கு உதயமார்த்தாண்ட தீபாராதனை நடைபெற்றது.

அதிகாலை  5.40 மணிக்கு கோயில் பிரகாரத்திலுள்ள செப்புக் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து கொடிமரத்திற்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.

கரோனா தடுப்பு நடவடிக்கையாக நிகழ்ச்சியில்  பங்கேற்க பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. பக்தர்கள் வசதிக்காக திருவிழா நிகழ்ச்சிகள் இணையதள வலைதளத்தில் நேரலையாக ஒளிபரப்பட்டது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.