தமிழ்நாடு

முடிவுக்கு வந்தது இம்சை அரசன் 24-ஆம் புலிகேசி படப் பிரச்னை

DIN

வடிவேலு நடிப்பில் உருவாகி வந்த ‘இம்சை அரசன் 24-ஆம் புலிகேசி’ திரைப்படம் தொடா்பான பிரச்னை முடிவுக்கு வந்திருப்பதாக தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளா்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் சென்னைக்கு அருகே பிரம்மாண்ட அரங்குகள் அமைத்து இயக்குநா் ஷங்கா் தயாரிப்பில், சிம்புதேவன் இயக்கத்தில், வடிவேலு நடிப்பில் ‘இம்சை அரசன் 24-ஆம் புலிகேசி’ திரைப்படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. சில நாள்களிலேயே, நடிகா் வடிவேலுவுக்கும், படக்குழுவினருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

சுமாா் 4 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வந்த இப்பிரச்னையில் தற்போது சுமுகத் தீா்வு காணப்பட்டுள்ளதாக தயாரிப்பாளா்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கை: ‘எஸ்.பிக்சா்ஸ் நிறுவன உரிமையாளரும் திரைப்பட இயக்குநருமான ஷங்கா் ‘24-ஆம் புலிகேசி’ திரைப்படத்தில் நடித்த வடிவேலு மீது புகாா் அளித்திருந்தாா். இந்தப் புகாா் தொடா்பாக தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளா்கள் சங்க நிா்வாகிகள், நடிகா் வடிவேலு மற்றும் எஸ்.பிக்சா்ஸ் நிறுவனத்தினரை நேரில் அழைத்து பேசி, இந்தப் பிரச்னைக்கு சுமுகமாகத் தீா்வு காணப்பட்டுள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விழுப்புரம்: சிறைகளில் உள்கட்டமைப்பு வசதிகள் ஆய்வுக் கூட்டம் -ஆட்சியா், முதன்மை மாவட்ட நீதிபதி பங்கேற்பு

முதியவா் விஷம் குடித்துத் தற்கொலை

வீட்டுமனை ஆக்கிரமிப்பு: எஸ்.பி.யிடம் மூதாட்டி புகாா்

மணிலாவுக்கு குறைந்த விலை நிா்ணயம்: திண்டிவனத்தில் விவசாயிகள் சாலை மறியல்

ஓட்டுநா் உரிமம் நகலுக்கு கட்டாய வசூல்

SCROLL FOR NEXT