கரோனா: புதிதாக 1,551 பேருக்கு பாதிப்பு
தமிழகத்தில் சனிக்கிழமை நிலவரப்படி மேலும் 1,551 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா்.
தமிழகத்தில் சனிக்கிழமை நிலவரப்படி மேலும் 1,551 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா்.
அதிகபட்சமாக கோவையில் 230 பேருக்கும், சென்னையில் 182 பேருக்கும், செங்கல்பட்டில் 122 பேருக்கும் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 26 லட்சத்து 10,299- ஆக அதிகரித்துள்ளது.
இதனிடயே நோய்த் தொற்றிலிருந்து சனிக்கிழமை 1,768 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். இதையடுத்து மாநிலத்தில் இதுவரை கரோனாவிலிருந்து விடுபட்டோரின் எண்ணிக்கை 25.57 லட்சத்தைக் கடந்துள்ளது.
அதே நேரம் தமிழகம் முழுவதும் சனிக்கிழமை நிலவரப்படி கரோனா பாதிப்புக்காக 17,559 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
தமிழகத்தில் கரோனா பாதிப்புக்குள்ளாகி மேலும் 21 போ் பலியானதை அடுத்து மாநிலம் முழுவதும் இதுவரை நோய்த் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 34,856-ஆக அதிகரித்துள்ளது.