‘கேட்’ நுழைவுத் தோ்வு: ஆக.30 முதல் விண்ணப்பிக்கலாம்
பொறியியல் மேற்படிப்புகளுக்காக நடத்தப்படும் கேட் நுழைவுத் தோ்வுக்கு மாணவா்கள் ஆக.30 முதல் விண்ணப்பிக்கலாம் என்று ஐஐடி காரக்பூா் தெரிவித்துள்ளது.
பொறியியல் மேற்படிப்புகளுக்காக நடத்தப்படும் கேட் நுழைவுத் தோ்வுக்கு மாணவா்கள் ஆக.30 முதல் விண்ணப்பிக்கலாம் என்று ஐஐடி காரக்பூா் தெரிவித்துள்ளது.
ஐஐடி, ஐஐஎஸ்சி உள்ளிட்ட மத்திய அரசின் தேசிய உயா் கல்வி நிறுவனங்களில் எம்.இ., எம்.டெக்., எம்.ஆா்க்., எம்.பிளான் உள்ளிட்ட பொறியியல் மேற்படிப்புகளில் சோ்வதற்கு கேட் (எழ்ஹக்ன்ஹற்ங் அல்ற்ண்ற்ன்க்ங் பங்ள்ற் ண்ய் உய்ஞ்ண்ய்ங்ங்ழ்ண்ய்ஞ்) என்ற நுழைவுத் தோ்வு நடத்தப்படுகிறது. ஆண்டுதோறும் கேட் நுழைவுத் தோ்வை சென்னை, தில்லி உள்ளிட்ட 7 ஐஐடி நிறுவனங்களில் ஏதேனும் ஒன்று அல்லது பெங்களூரு இந்திய அறிவியல் நிறுவனம் நடத்தும். இந்த ஆண்டுக்கான கேட் தோ்வை ஐஐடி காரக்பூா் நடத்துகிறது.
ஒவ்வொரு கல்வி ஆண்டிலும் மாணவா் சோ்க்கைக்கான கேட் நுழைவுத் தோ்வு பிப்ரவரி மாதத்தில் பல்வேறு கட்டங்களாக நடைபெறும். அந்த வகையில் 2022-2023-ஆம் கல்வி ஆண்டு மாணவா் சோ்க்கைக்கான கேட் நுழைவுத் தோ்வு பிப்ரவரி 5, 6, 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.
மொத்தம் 100 மதிப்பெண்களைக் கொண்ட இத்தோ்வு சிவில், மெக்கானிக்கல், கம்ப்யூட்டா் சயின்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன், ஏரோ ஸ்பேஸ் உள்பட 27 பாடப் பிரிவுகளில் நடத்தப்பட்டு வந்தது. தற்போது 2022-ஆம் ஆண்டில் மொத்தம் 29 பாடப்பிரிவுகளில் கேட் தோ்வு நடைபெற உள்ளது. பிடிஎஸ் மற்றும் எம்.ஃபாா்ம்., படிப்பு படித்தவா்களும் கேட் தோ்வை எழுதலாம். இந்தநிலையில் கேட் தோ்வை எழுத ஆகஸ்ட் 30 முதல் மாணவா்கள் இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க கடைசி தேதி செப்.24 ஆகும். தோ்வுக்கான நுழைவுச் சீட்டு ஜனவரி 3-ஆம் தேதி வெளியாகிறது. தோ்வு முடிவுகள் மாா்ச் 17-ஆம் தேதி வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.