அமைச்சர் பொன்முடி(கோப்புப்படம்) 
தமிழ்நாடு

பெயரை நீக்குவது எங்கள் நோக்கமில்லை: அமைச்சர் பொன்முடி விளக்கம்

ஜெயலலிதா பெயரை நீக்குவது எங்கள் நோக்கமில்லை என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி செவ்வாய்க்கிழமை விளக்கம் அளித்துள்ளார்.

DIN

ஜெயலலிதா பெயரை நீக்குவது எங்கள் நோக்கமில்லை என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி செவ்வாய்க்கிழமை விளக்கம் அளித்துள்ளார்.

விழுப்புரத்தில் உள்ள ஜெயலலிதா பல்கலைகழகத்தை சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தோடு இணைக்கும் மசோதா அதிமுக உறுப்பினர்களுக்கு மத்தியில் பேரவையில் இன்று நிறைவேற்றப்பட்டது.

அப்போது அமைச்சர் பொன்முடி பேசியது:

“பெயரை நீக்குவது எங்கள் நோக்கமில்லை. இசை மற்றும் மீன்வளப் பல்கலைகழகத்துக்கு வைக்கப்பட்டுள்ள ஜெயலலிதா பெயரை மாற்றவில்லை. உயிருடன் இருக்கும்போது பெயர் வைக்கக்கூடாது என விதி இருக்கும்போது அம்மா உணவகம் என பெயர் வைத்தது யார்?

கோயம்பேடு பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில் கலைஞரின் பெயரை மாற்றியது அதிமுகதான்.”

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

அரசுப் பேருந்து, காா்களை சேதப்படுத்தியதாக 7 போ் கைது

ஜி.கே. உலகப் பள்ளியில் பேட்மிண்டன் அகாதெமி திறப்பு

SCROLL FOR NEXT