தமிழ்நாடு

முனைவர் தொ.ப. உள்பட தமிழ் எழுத்தாளர்களின் நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்படும்: அமைச்சர் அறிவிப்பு

DIN

முனைவர் தொ.பரமசிவன், சிலம்பொலி சு.செல்லப்பன் உள்ளிட்ட தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டு பரிவுத்தொகை வழங்கப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார். 

தமிழக சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. இதில் தமிழ் ஆட்சி மொழி மற்றும் தமிழ்ப் பண்பாடு, தொல்லியல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். 

அப்போது, தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டு பரிவுத்தொகை வழங்கப்படும் என்று கூறினார். 

அதன்படி, முனைவர் தொ.பரமசிவன், சிலம்பொலி சு.செல்லப்பன், புலவர் இளங்குமரனார், முருகேச பாகவதர், சங்கரவள்ளி நாயகம், புலவர் செ.இராசு ஆகியோரின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்படும் என பேரவையில் அறிவித்தார். 

மேலும், திருக்கோயில்களில் தேவாரம், திருவாசகம், திவ்வியப் பிரபந்தம் ஆகியவற்றோடு திருக்குறள் வகுப்புகள் நடத்தப்படும்.

தமிழறிஞர்கள், எழுத்தாளர்களின் பிறந்த நாளன்று இலக்கியக் கூட்டங்கள் நடத்த ரூ.15 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும்.

புகழ்பெற்ற தலைவர்கள், தமிழறிஞர்களின் ஒலி/ ஒளிப்பொழிவுகளை ஆவணமாக்க ஆண்டுதோறும் ரூ. 25 லட்சம் ஒதுக்கீடு செய்யப்படும் உள்ளிட்ட அறிவிப்புகளையும் வெளியிட்டுள்ளார். 

தமிழில் பெயர் எழுதும்போது முன் எழுத்தையும்(initial) தமிழிலேயே எழுதும் நடைமுறையை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெப்ப அலை: தமிழகத்துக்கு மே 4 வரை மஞ்சள் எச்சரிக்கை!

வேதாரண்யம் உப்பு சத்தியாகிரக நினைவு நாள்: தியாகிகளுக்கு அஞ்சலி!

லாரி மீது கார் மோதி விபத்து: 5 பேர் பலி

முதல்வர் ஸ்டாலின் மே நாள் வாழ்த்து!

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை!

SCROLL FOR NEXT