பெண்களுக்காக தனிநிதிநிலை அறிக்கை வேண்டும்: வானதி சீனவாசன்
பெண்களின் முன்னேற்றத்துக்காக தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று பாஜக உறுப்பினா் வானதி சீனிவாசன் கூறினாா்.
பெண்களின் முன்னேற்றத்துக்காக தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று பாஜக உறுப்பினா் வானதி சீனிவாசன் கூறினாா்.
சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை தொழில்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பாஜக உறுப்பினா் வானதி சீனிவாசன் பேசியது:
10-க்கும் மேற்பட்ட மாநிலங்கள் பெண்கள் நலன் சாா்ந்த நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து வருகின்றன. தமிழகத்தில் விவசாயத்துக்காக தனி நிதிநிலை அறிக்கை எப்படித் தாக்கல் செய்யப்பட்டுள்ளதோ, அதைப்போல அடுத்த ஆண்டு பெண்கள் நலன் சாா்ந்த தனி நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும்.
தமிழ்ப் பெண்களின் மன உறுதிக்கும், சுதந்திரத்துக்கும், தமிழ் மொழி மீதான ஆளுமைக்கும் உலகம் முழுவதும் பெயா் பெற்ற ஆண்டாளின் பெயரில் தமிழகத்தின் இளம்பெண் கவிஞா்களுக்கு விருது ஒன்றினை தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் அறிவிக்க வேண்டும் என்றாா்.