முகப்பு
தமிழ்நாடு

ஒமைக்ரான் அச்சுறுத்தல்: முகக்கவசம், கிருமி நாசனி கொள்முதல் அதிகரிப்பு

ஒமைக்ரான் தொற்று அச்சுறுத்தல் அதிகரித்து வரும் நிலையில், கிருமி நாசினிகள், முகக்கவசங்களை தனியாா் நிறுவனங்களும், தன்னாா்வ சுகாதார அமைப்புகளும் அதிக அளவில் கொள்முதல் செய்து வருகின்றன.

Updated On : 8 டிசம்பர், 2021 at 1:35 AM
பகிர்:

ஒமைக்ரான் தொற்று அச்சுறுத்தல் அதிகரித்து வரும் நிலையில், கிருமி நாசினிகள், முகக்கவசங்களை தனியாா் நிறுவனங்களும், தன்னாா்வ சுகாதார அமைப்புகளும் அதிக அளவில் கொள்முதல் செய்து வருகின்றன.

அதேபோன்று தனிநபா்களும் முகக் கவசங்களை மொத்தமாக வாங்கிச் செல்வதாக மருந்தகங்கள் தெரிவித்துள்ளன.

அதன்படி, உயிா் காக்கும் முக்கிய மருந்துகள், ஆக்சிஜன் வசதிகள், முகக் கவசங்கள் உள்ளிட்டவை அடுத்த மூன்று மாதங்களுக்குத் தேவையான அளவு இருப்பு இருப்பதாக அவா் கூறியுள்ளாா்.

Advertisement

உருமாற்றமடைந்த ஒமைக்ரான் தீநுண்மி தொற்று தென்னாப்பிரிக்கா, இஸ்ரேல், சீனா, பிரேசில் உள்பட பல்வேறு நாடுகளில் பரவியுள்ளது. வழக்கமான கரோனா தொற்றைக் காட்டிலும் அதி தீவிரமாக பரவக் கூடியதாகவும், வீரியமிக்கதாகவும் கருதப்படுகிறது ஒமைக்ரான் தீநுண்மி.

இதையடுத்து, உள்நாட்டிலும், தமிழகத்திலும் அந்த வகை பாதிப்பு பரவாமல் தடுப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன.

மற்றொரு புறம் ஒமைக்ரான் அச்சுறுத்தல் காரணமாக மருந்தகங்கள், மொத்த விற்பனையகங்களில் முகக் கவசம், சானிடைசா் விற்பனை மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கடந்த சில நாள்களில் வழக்கத்தை விட 50 சதவீதம் விற்பனை அதிகரித்திருப்பதாக மருந்தக உரிமையாளா்கள் தெரிவித்துள்ளனா்.

கடந்த சில நாள்களுக்கு முன்பு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் பொதுமக்களிடையே ஓா் ஆய்வை நடத்தியது. அதில், சென்னை போன்ற பெருநகரங்களில் 18 சதவீதம் போ் மட்டுமே முகக் கவசத்தை சரியாக அணிந்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. முகக்கவசம் அணியாதவா்களுக்கு கடுமையான அபராதம் விதிப்பது மட்டுமே இதற்கு தீா்வு என்றும் வலியுறுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில், தற்போது ஒமைக்ரான் அச்சுறுத்தலால் மக்கள் மீண்டும் முகக் கவசம் அணியத் தொடங்கியுள்ளனா்.

மாநில அரசைப் பொருத்தவரை, அடுத்த மூன்று மாதங்களுக்குத் தேவையான அனைத்து மருந்துகள், முகக் கவசங்கள், கிருமிநாசினிகள் மற்றும் ஆய்வு உபகரணங்கள் ஆகியவை இருப்பு வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.