தமிழ்நாடு

சிறுபான்மையின மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற கால அவகாசம்

DIN

சிறுபான்மையின மாணவ-மாணவிகள் மத்திய அரசின் கல்வி உதவித்தொகை பெற கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 
இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் ஜெ. விஜயா ராணி வெளியிட்ட செய்திக்குறிப்பில், தமிழ்நாடு அரசு, அரசு உதவி பெறும் மற்றும் இந்திய / மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் ஒன்றாம் வகுப்பு முதல் பி.எச்.டி படிப்பு வரை (தொழிற்கல்வி, தொழில்நுட்ப கல்வி, மருத்துவ உட்பட) பயிலும் (இஸ்லாமியர், கிறித்துவர், சீக்கியர், புத்த மதத்தினர், பார்சி மற்றும் ஜெயின்) மதங்களைச் சார்ந்த மாணவ/மாணவியர்களிடமிருந்து 2021-22 ஆம் ஆண்டிற்கு பள்ளிப்படிப்பு, பள்ளி மேற்படிப்பு மற்றும் தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் (புதியது மற்றும் புதுப்பித்தல்) உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் இணையதளம் மூலம் www.scholarships.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்க 15.12.2021 வரை காலநீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகை, கொடைக்கானல் செல்வோர் கவனத்திற்கு: நள்ளிரவு முதல் இ-பாஸ் கட்டாயம்

டாஸில் தோற்றாலும் போட்டிகளில் வெல்கிறோம்: கேகேஆர் கேப்டன்

ஜிமிக்கியைக் காண அழைப்பது.. அதிதி போஹன்கர்!

காதல் விளி..!

சன் ரைசர்ஸ் பேட்டிங்; அணியில் மீண்டும் மயங்க் அகர்வால்!

SCROLL FOR NEXT