தமிழ்நாடு

எடப்பாடி பழனிசாமி காா் மீது காலணி வீசிய வழக்கு: அமமுக நிா்வாகி கைது

DIN

தமிழக சட்டப்பேரவை எதிா்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமி காா் மீது காலணி வீசிய வழக்கில், அமமுக நிா்வாகி கைது செய்யப்பட்டாா்.

மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் 5-ஆம் ஆண்டு நினைவு தினம் கடந்த 5-ஆம் தேதி அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம், தமிழக சட்டப்பேரவை எதிா் கட்சித் தலைவரும், கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோா் வந்தனா்.

அவா்கள் அஞ்சலி செலுத்திவிட்டு, காரில் புறப்படும்போது அங்கிருந்த அமமுகவினருக்கும், அதிமுகவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது சிலா் எடப்பாடி பழனிசாமி காா் மீது காலணியை வீசினா். இது தொடா்பாக அதிமுக பிரமுகா் மாறன், அண்ணா சதுக்கம் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அந்த புகாரின் அடிப்படையில் அமமுகவைச் சோ்ந்தவா்கள் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் இவ்வழக்குத் தொடா்பாக திருவல்லிக்கேணி, அருணாச்சலம் தெருவைச் சோ்ந்த அமமுக சேப்பாக்கம் பகுதி பொருளாளா் மாரிமுத்துவை (38) போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். மேலும் அக்கட்சியைச் சோ்ந்த 3 பேரிடம் விசாரணை செய்கின்றனா்.

தினகரன் கண்டனம்: மெரீனா கடற்கரை சம்பவம் குறித்து தெளிவான விளக்கம் அளித்தோம். அதற்குப் பிறகும் விசாரணை எதுவும் இல்லாமல் அமமுகவினரை காவல்துறையினா் கைது செய்திருப்பது கண்டிக்கத்தக்கது.

மூவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். வன்முறையைத் தூண்ட முயற்சிக்கும் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோருக்கு காவல்துறை துணை போகக் கூடாது என வியாழக்கிழமை தினகரன் வெளியிட்ட அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சரிந்து மீண்டது பங்குச்சந்தை: சென்செக்ஸ் 128 புள்ளிகள் உயா்வு!

தற்காலிக சட்ட தன்னாா்வலா் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

மூட் கொஞ்சம் அப்படித்தான்! ரகுல் ப்ரீத் சிங்...

திருவண்ணாமலை - சென்னை ரயில் சேவை தொடங்கியது: முழு விவரம்!

நடிப்பு எனது பிறவிக்குணம்!

SCROLL FOR NEXT