தமிழ்நாடு

தமிழகத்தில் 2ஆம் நாளாக 700-க்கும் கீழ் குறைந்த கரோனா பாதிப்பு

DIN

தமிழகத்தில் பல மாதங்களுக்குப் பிறகு 2ஆவது நாளாக கரோனா பாதிப்பு 700-க்கும் கீழ் குறைந்தது. 
அதன்படி, இன்று புதிதாக 688 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மாநிலத்தில் இதுவரை 5.52 கோடிக்கும் மேற்பட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதில் 27 லட்சத்து 34,034 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
இன்று வெளியான பரிசோதனை முடிவுகளில் அதிகபட்சமாக சென்னையில் 123 பேருக்கும், கோவையில் 110 பேருக்கும், ஈரோட்டில் 59 பேருக்கும் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனிடையே, கரோனா தொற்றிலிருந்து மேலும் 739 போ் விடுபட்டு வீடு திரும்பியுள்ளனா். 

இதன் மூலம் இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 26 லட்சத்து 89,627-ஆக அதிகரித்துள்ளது. மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் தற்போது மருத்துவக் கண்காணிப்பில் 7,821 போ் உள்ளதாக சுகாதாரத் துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 
தமிழகத்தில் கரோனா பாதிப்புக்குள்ளாகி மேலும் 11 போ் பலியாகியதை அடுத்து நோய்த் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 36,586-ஆக அதிகரித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வு நாளை தொடக்கம்

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

SCROLL FOR NEXT