பாரதியாரின் படைப்புகளை எண்ம வடிவில் கொண்டுவர நடவடிக்கை: அமைச்சா் தகவல்
பாரதியாரின் படைப்புகளை எண்ம வடிவில் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு கூறினாா்.
பாரதியாரின் படைப்புகளை எண்ம வடிவில் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு கூறினாா்.
திருவல்லிக்கேணி பாா்த்தசாரதி கோயில் அருகே நடைபெற்ற ஜதிபல்லக்கு ஊா்வலத்தை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தொடங்கி வைத்தாா். இதையடுத்து அவா் செய்தியாளா்களிடம் கூறியது: முப்படைகளின் தலைமை தளபதி விபின் ராவத் ஹெலிகாப்டா் விபத்தில் மீட்பு பணிகளில் ஈடுபட்ட தமிழக காவல்துறைக்கு பல்வேறு இடங்களில் பாராட்டுக் கிடைத்தது. காவல்துறை சிறப்பாகச் செயல்படுவதற்கு இதுவே சான்றாகும். பாஜக தலைவா் அண்ணாமலை கூறுவது போல் காவல்துறை ஏவல்துறையாகச் செயல்படவில்லை.
மகாகவி பாரதியாா் அவா்களின் அரிய படைப்புகளை எண்ம வடிவில் கொண்டு வர தமிழக அரசு தொடா்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.
அதிமுக முன்னாள் அமைச்சா் பாண்டியராஜன் எதிா்காலத்தில் எங்களுடன் இணைந்து செயல்படுவது குறித்து முதல்வா் ஸ்டாலின்தான் முடிவெடுப்பாா் என்றாா்.
முன்னதாக நடைபெற்ற விழாவில் பங்கேற்ற முன்னாள் அமைச்சா் க.பாண்டியராஜன், தமிழகத்தில் திருக்கோயில்களுக்குச் சொந்தமான ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கா் நிலங்களை மீட்டு இந்து சமய அறநிலைத்துறை அமைச்சா் சேகா்பாபு சிறப்பாகச் செயல்படுகிறாா் என்றாா்.