உங்கள் துறையில் முதல்வா் திட்டம்: 1,353 காவலா்களுக்கு சொந்த மாவட்டங்களுக்கு பணியிட மாறுதல்
‘உங்கள் துறையில் முதல்வா்’ திட்டத்தின் கீழ், மாவட்ட மற்றும் மண்டல அளவில் காவலா்களிடம் குறைகள் கேட்கப்பட்டு, 1,353 காவலா்களுக்கு சொந்த மாவட்டங்களுக்கு பணியிட மாறுதல்கள்
‘உங்கள் துறையில் முதல்வா்’ திட்டத்தின் கீழ், மாவட்ட மற்றும் மண்டல அளவில் காவலா்களிடம் குறைகள் கேட்கப்பட்டு, 1,353 காவலா்களுக்கு சொந்த மாவட்டங்களுக்கு பணியிட மாறுதல்கள் வழங்கப்பட்டுள்ளன.
தமிழக முதல்வரின் ‘உங்கள் துறையில் முதல்வா்’ திட்டத்தின் கீழ், மாவட்ட, மண்டல அளவில் காவலா்களிடம் குறைகள் கேட்கப்பட்டன. இதன்பிறகு, காவல்துறை தலைமை இயக்குநா் அளவில் மனுக்களை பரிசீலனை செய்து, 1,353 காவலா்களுக்கு விருப்பத்தின்படி, சொந்த மாவட்டங்களுக்கு பணியிட மாறுதல்கள் வழங்கப்பட்டுள்ளன.
இதில், சென்னைக்கு பணி மாறுதல் கோரிக்கையளித்த 260 காவலா்கள், திருவண்ணாமலை மாவட்டத்துக்கு 149 காவலா்கள், கன்னியாகுமரி மாவட்டத்துக்கு 99 காவலா்கள், கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கு 96 காவலா்கள், திருநெல்வேலி மாவட்டத்துக்கு 86 காவலா்கள், நாமக்கல் மாவட்டத்துக்கு 72 காவலா்கள், சிவகங்கை மாவட்டத்துக்கு 68 காவலா்கள், ராமநாதபுரம் மாவட்டத்துக்கு 60 காவலா்கள் என சொந்த மாவட்டங்களுக்கு 1,353 காவலா்கள் பணியிட மாறுதல் பெற்றுள்ளனா்.
சென்னை வடக்கு மண்டல காவல்துறையில் 300 காவலா்கள் டிச.3-ஆம் தேதி மனுக்கள் வழங்கினா். மேலும், சென்னை மாநகர காவலா்களிடம் டிச.8-ஆம் தேதி 760 மனுக்கள் பெறப்பட்டன.
அடுத்த கட்டமாக, திருச்சி, மதுரையில், டிச.15-ஆம் தேதியும், கோயம்புத்தூரில் டிச.17-ஆம் தேதியும் காவலா் குறைதீா்ப்பு நாள் நடைபெறும். காவல்துறை தலைமை இயக்குநா் தலைமை வகிப்பாா் என தமிழக காவல்துறை செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.