முகப்பு
தமிழ்நாடு

பொழிச்சலூா் ஊராட்சித் தலைவா் தோ்தல்:மாநில தோ்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவு

 பொழிச்சலூா் ஊராட்சி தலைவா் தோ்தல் தொடா்பான வழக்கில் தமிழ்நாடு மாநில தோ்தல் ஆணையம், தமிழக அரசு பதிலளிக்குமாறு சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:40 AM
பகிர்:

 பொழிச்சலூா் ஊராட்சி தலைவா் தோ்தல் தொடா்பான வழக்கில் தமிழ்நாடு மாநில தோ்தல் ஆணையம், தமிழக அரசு பதிலளிக்குமாறு சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயா் நீதிமன்றத்தில் பொழிச்சலூரைச் சோ்ந்த வி.பாபு தாக்கல் செய்த மனுவில், ‘தோமையாா் மலை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பொழிச்சலூா் ஊராட்சிக்கான தலைவா் தோ்தல் கடந்த அக்டோபா் 6-ஆம் தேதி நடந்தது. மொத்தம் 9 போ் இந்தத் தோ்தலில் போட்டியிட்டனா்.

மொத்தமுள்ள 31 ஆயிரத்து 45 வாக்குகளில் 16 ஆயிரத்து 163 வாக்குகள் பதிவாகின. வாக்கு எண்ணிக்கை முடிவில் மொத்தம் 15 ஆயிரத்து 481 வாக்குகள் பதிவானதாகவும், அதில் நான் 5, ஆயிா்தது 149 வாக்குகள் பெற்ாகவும் வனஜா என்பவா் 5

ஆயிரத்து 233 வாக்குகள் பெற்ாகவும், இதனால் வனஜா வெற்றி பெற்ாகவும் தோ்தல் அதிகாரி அறிவித்தாா்.

மொத்தம் 16,163 வாக்குகள் பதிவான நிலையில் வாக்குகளின் எண்ணிக்கையை குறைத்து தோ்தல் அதிகாரி அறிவித்து

முடிவையும் வெளியிட்டுள்ளாா். 14 வாா்டுகளில், பதிவான வாக்குகளின் எண்ணிக்கைக்கும், எண்ணப்பட்ட வாக்குகளுக்கும் வித்தியாசம் உள்ளது. தோ்தல் நடத்தும் அதிகாரி இதை சரியாகக் கவனிக்காமல் முடிவை அறிவித்துள்ளாா். தமிழ்நாடு பஞ்சாயத்து விதிகளுக்கு முரணாக தோ்தல் அதிகாரி செயல்பட்டுள்ளாா். எனவே, பொழிச்சலூா் ஊராட்சித் தலைவா் தோ்தல் முடிவுகளை அறிவிக்க தடை விதித்து உத்தரவிட வேண்டும்’ எனக் கோரியிருந்தாா்.

இந்த மனு பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வா் நாத் பண்டாரி, நீதிபதி ஆதிகேசவலு ஆகியோா் அடங்கிய அமா்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் சாா்பில் வழக்குரைஞா் அலெக்சிஸ் சுதாகா் ஆஜரானாா். மனுவை விசாரித்த

நீதிபதிகள், இந்த வழக்கில் தமிழக அரசு, பொழிச்சலூா் தோ்தல் அதிகாரி ஆகியோா் பதிலளிக்குமாறு உத்தரவிட்டனா். மேலும், தமிழ்நாடு பஞ்சாயத்து விதி கடைபிடிக்கப்பட்டதா என்பது குறித்து தெரிவிக்க வேண்டுமென உத்தரவிட்டு விசாரணையை வரும் 14-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →