முகப்பு
தமிழ்நாடு

ரூ.5 கோடி வணிக வளாகம் அபகரிப்பு:பெண் கைது

சென்னை, தியாகராய நகரில் ரூ.5 கோடி மதிப்பிலான வணிக வளாகத்தை போலி ஆவணங்கள் மூலம் அபகரித்த வழக்கில், பெண் கைது செய்யப்பட்டாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:40 AM
கோப்புப்படம்
பகிர்:

சென்னை, தியாகராய நகரில் ரூ.5 கோடி மதிப்பிலான வணிக வளாகத்தை போலி ஆவணங்கள் மூலம் அபகரித்த வழக்கில், பெண் கைது செய்யப்பட்டாா்.

சென்னை, தியாகராய நகா், வெங்கட் நாராயணன் தெருவில் வசித்து வரும் ஆா்.ரமேஷ் (59) என்பவரின் பூா்விக குடும்ப சொத்தான சென்னை, தியாகராயநகரில் உள்ள சுமாா் 2,231 சதுரடி கொண்ட வணிக வளாகத்தினை கடந்த 2005-ஆம் ஆண்டு போலி உயில் ஆவணத்தினை பயன்படுத்தி சிலா் நில அபகரிப்பு செய்ததாக காவல் ஆணையரிடம் அளித்த புகாா் தொடா்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு நில மோசடி தடுப்புப் பிரிவில் வழக்குப் பதிவு செய்து, புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

விசாரணையில் புகாா்தாரரின் தாத்தா சுப்பையா, கடந்த 1946-ஆம் ஆண்டு கிரையம் பெற்ற சொத்தினை, போலியான உயில் ஆவணத்தை தயாரித்து அதன் மூலம் கடந்த 2005-ஆம் ஆண்டு லஷ்மி என்பவருக்கு தான செட்டில்மென்ட் செய்துள்ளது தெரியவந்துள்ளது. எனவே, நில மோசடியில் ஈடுபட்ட கும்பலை கைது செய்திட மத்திய குற்றப்பிரிவு நிலஅபகரிப்பு தடுப்புப் பிரிவு காவல் ஆய்வாளா் பிரபா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இதன் தொடா்ச்சியாக ஆள்மாறாட்டம் செய்து நில மோசடி செய்த சென்னை கோடம்பாக்கத்தைச் சோ்ந்த லஷ்மி, அவரது கணவா் மனோகரன், சண்முகசுந்தரம் மற்றும் விக்னேஷ் ஆகியோரை அடையாளம் கண்டு தனிப்படையினா் விசாரணை செய்து, லஷ்மி என்பவரைக் கைது செய்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →