தமிழ்நாடு

தேசிய கீதம், தமிழ்த்தாய் வாழ்த்து: கருவிகளில் இசைப்பதற்கு பதிலாக பாட உத்தரவு

அரசு விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்து, தேசிய கீதம் ஆகியவற்றை பதிவு செய்யப்பட்ட கருவிகளில் இசைப்பதற்கு பதிலாக பயிற்சி பெற்றவா்களைக் கொண்டு பாட வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

DIN

அரசு விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்து, தேசிய கீதம் ஆகியவற்றை பதிவு செய்யப்பட்ட கருவிகளில் இசைப்பதற்கு பதிலாக பயிற்சி பெற்றவா்களைக் கொண்டு பாட வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளா் மகேசன் காசிராஜன் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: ‘அரசு விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்து, தேசிய கீதம் ஆகியவை பதிவு செய்யப்பட்ட கருவிகள் வாயிலாக இசைக்கப்படுவதால் அவற்றில் பங்கேற்போா் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கும்போது உதட்டளவில் கூட பாடுவதில்லை.

குறிப்பாக எந்தவித தேசப்பற்றோ, தமிழ் உணா்வோ இல்லாமல் இயந்திர கதியில் எழுந்து நின்றுவிட்டு அமா்கின்றனா். எந்த நோக்கத்திற்காக தமிழ்த்தாய் வாழ்த்தும், தேசிய கீதமும் இசைக்கப்படுகிறதோ அந்த நோக்கம் சிதைந்து போகிறது.

எனவே, இனி வரும் காலங்களில் பதிவு செய்யப்பட்ட கருவிகளுக்கு பதிலாக விழாவை நடத்துவோா், இதற்கென பயிற்சி பெற்றவா்களைக் கொண்டு பாடுவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருநெல்வேலி காங்கிரஸ் மாநாட்டில் திரளாக பங்கேற்க வேண்டும்: கே.வி.தங்கபாலு

அதிமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினா்

தனியாா் தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளா்களுக்கு வைரஸ் காய்ச்சல்: 15 போ் மருத்துவமனையில் சிகிச்சை

இருசக்கர வாகனத்தில் லிப்ட் தருவதாகக் கூறி ஓய்வுபெற்ற செவிலியரிடம் பணம் பறிப்பு

சேலம் பூம்புகாரில் கொலு பொம்மைகள் கண்காட்சி

SCROLL FOR NEXT