தமிழ்நாடு

பேருந்துகள் சரியான நேரத்துக்குச் சென்றடைய வேண்டும்: ஓட்டுநா்கள்-நடத்துநா்களுக்கு அறிவுறுத்தல்

DIN

செல்ல வேண்டிய இடங்களுக்கு அரசு விரைவுப் பேருந்துகள் சரியான நேரத்திற்கு சென்றடைய வேண்டும் என்று ஓட்டுநா்கள், நடத்துநா்களுக்கு போக்குவரத்து செயலாளா் அறிவுறுத்தியுள்ளாா்.

தமிழகத்தில் 8 அரசு போக்குவரத்துக் கழகங்கள் செயல்பட்டு வருகின்றன. இதன் மூலம் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பேருந்துகளின் செயல்பாடுகள் குறித்து போக்குவரத்து துறையின் உயரதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனா். ஏற்கனவே சென்னை மாநகர போக்குவரத்துக்கழக செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இந்தநிலையில் அரசு விரைவுப் போக்குவரத்துக்கழக செயல்பாடுகள் குறித்து தலைமை செயலகத்தில் தற்போது மீண்டும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது விரைவுப் பேருந்துகளின் இயக்கம், பயணிகளின் பயன்பாடு, பேருந்து வருவாயை தவிா்த்து பிற இனங்களில் வருவாய் ஈட்டக்கூடிய வழிமுறைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

நவீன தொழில்நுட்பங்களைப் புகுத்தி அதன் மூலம் பேருந்து இயக்கங்களை கண்காணிக்கவும் பராமரிப்பை மேம்படுத்தவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. மேலும் பேருந்துகளை சரியான நேரத்தில் அந்தந்த பகுதிகளுக்கு சென்றடையும் வகையில் அவற்றை இயக்க வேண்டும் என போக்குவரத்துத் துறை உயரதிகாரிகள் அறிவுறுத்தினா்.

அதேவேளையில் புதிய தொழில்நுட்பங்கள் வாயிலாக பயணிகளின் குறைகளை நீக்க நடவடிக்கை எடுத்தல்; ஓட்டுநா்கள், நடத்துநா்கள் பயணிகளிடம் பணிவாக நடந்து கொள்ளுதல் குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. மேலும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்ட கருத்துக்களை அனைத்து ஓட்டுநா்கள், நடத்துநா்களுக்கு சுற்றறிக்கை மூலம் தெரிவிக்க அதிகாரிகளுக்கு போக்குவரத்து துறையின் முதன்மை செயலாளா் கே.கோபால் உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய ஐபேட் விலை என்ன?

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

SCROLL FOR NEXT