தமிழ்நாடு

பண்டிகை காலங்களில் கூட்டம் கூடுவதைத் தவிர்க்க அறிவுரை

DIN

பண்டிகை காலங்களில் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்று பொதுமக்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். 

கரோனா நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்தும் வகையில் டிசம்பர் 31-ஆம் தேதி வரை கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கை நீட்டித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

பண்டிகைக் காலங்களில்,  கரோனாநோய்த் தொற்று  பரவலைக் கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், உருமாறிய கரோனா – ஒமைக்ரான் வைரஸ் நோயைக் கருத்தில் கொண்டும், தடுப்பூசி செலுத்தும் பணியினை விரைவுபடுத்தவும், தலைமைச் செயலகத்தில் முதல்வர் தலைமையில் இன்று (டிச.13) ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதன் பிறகு கரோனாவைக் கட்டுப்படுத்தும் வகையில் ஏற்கெனவே பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கை டிசம்பர் 31-ஆம் தேதி வரை நீட்டித்து முதல்வர் உத்தரவிட்டுள்ளார். 

மேலும், ஒமைக்ரான் வைரஸ் நோய் பரவி வருவதால், பொது இடங்களில், பொதுமக்கள் முகக்கவசம் அணியாமல் இருப்பதன் காரணமாக, நோய்த் தொற்று பரவல் அதிகரிக்கக்கூடும் என்பதை பொதுமக்கள் கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

பொதுமக்கள் அனைவரும் எதிர்வரும் பண்டிகைக் காலத்தில், கூட்டம் கூடுவதை தவிர்க்குமாறும், பொதுஇடங்களில் கட்டாயம் முகக்கவசம் அணிவதோடு, சமூக இடைவெளியினை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்.

மாவட்ட நிருவாகம், பெருநகர சென்னை மாநகராட்சி, மருத்துவத் துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் நடத்தப்படும் தடுப்பூசி முகாம்களுக்கு சென்று பொதுமக்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜார்க்கண்ட் மாநில காங்கிரஸின் எக்ஸ் தளப் பக்கம் முடக்கம்

பாலியல் புகாரில் சிக்கிய ரேவண்ணாவின் பாஸ்போர்ட்டை முடக்க பிரதமரிடம் சித்தராமையா வலியுறுத்தல்

கண்களா, ஓவியமா...!

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைக் கையாள புதிய நெறிமுறைகள் வெளியீடு

இஸ்ரேலுக்கு எதிரான வழக்கு: தென்னாப்பிரிக்காவுடன் இணையும் துருக்கி!

SCROLL FOR NEXT