தமிழ்நாடு

புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதிக்கப்படுமா? முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை

DIN

தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள கரோனா கட்டுப்பாடுகள், ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.

 தமிழ்நாட்டில் கரோனா பரவல் இரண்டாம் அலை காரணமாக கடந்த மே மாதம் 10-ஆம் தேதி முதல் பொதுமுடக்கம் அமலில் இருந்து வருகிறது. இந்த தடையானது டிசம்பர் 15ஆம் தேதி முடிவடையவுள்ளது.

இதற்கிடையே அண்டை மாநிலங்களான கர்நாடகம், கேரளம், ஆந்திரத்தில் ஒமைக்ரான் வகை கரோனா வகையும் கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் புதிய வகை கரோனா பரவலை தடுக்கும் விதமாக ஊரடங்கை நீட்டிப்பது குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமைச்செயலர், மருத்துவத்துறை செயலர் உள்ளிட்டோருடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

இந்த ஆலோசனையில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை அல்லது கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து முடிவெடுக்கப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

6 மாதங்களில் 100 திரையரங்குகள் மூடல்!

ஜார்க்கண்ட் அமைச்சருக்கு 6 நாள் அமலாக்கத்துறை காவல்!

3 மாவட்டங்களில் அதி கனமழை: சிவப்பு எச்சரிக்கை!

பாரதிய ஜனதாவில் கால் பங்கு வேட்பாளர்கள் கட்சிமாறி வந்தவர்கள்!

பொய்களால் கலவரத்தை ஏற்படுத்த காங்கிரஸ் முயல்கிறது: மோடி!

SCROLL FOR NEXT