குரூப் கேப்டன் வருண் சிங் 
தமிழ்நாடு

வருண் சிங் மறைவு: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

குன்னூர் அருகே ஹெலிகாப்டர் விபத்தில் காயமுற்று சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்த குரூப் கேப்டன் வருண் சிங் மறைவிற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

DIN

குன்னூர் அருகே ஹெலிகாப்டர் விபத்தில் காயமுற்று சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்த குரூப் கேப்டன் வருண் சிங் மறைவிற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

குன்னூர் அருகே நடந்த துயர்மிகு ஹெலிகாப்டர் விபத்தில் காயமுற்று சிகிச்சை பெற்றுவந்த குரூப் கேப்டன் வருண் சிங் அவர்கள் உயிரிழந்துவிட்டார் என்ற துன்பச் செய்தி கேட்டு பெரிதும் வருத்தமுற்றேன். அவரது தீரமும் கடமையுணர்வும் அனைவருக்கும் ஊக்கமாக அமைவதுடன்; என்றும் அவர் நம் நினைவுகளில் நிலைத்து வாழ்வார் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் படுகாயமடைந்த கேப்டன் வருண் சிங் சிகிச்சை பலனின்றி பலியானதாக விமானப் படை அறிவித்துள்ளது.

ஹெலிகாப்டா் விபத்தில் சிக்கி உயிருடன் மீட்கப்பட்ட கேப்டன் வருண் சிங்குக்கு பெங்களூருவில் உள்ள விமானப் படை மருத்துவமனையில் தொடா்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் ஹெலிகாப்டர் விபத்தில் பலி எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உதயநிதிக்கே வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின் பொருள் சரியாகத் தெரியவில்லை: தமிழிசை

அக்டோபரில் உச்சம் தொட்ட கார்கள் விற்பனை!

மெக்சிகோவில் சூப்பர் மார்க்கெட்டில் பயங்கர தீ விபத்து: 23 பேர் பலி

எங்களிடம் அது இல்லையா? மாரி செல்வராஜைக் கேள்விகேட்ட நடிகை!

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையை எதிர்ப்பது ஏன்?- முதல்வர் ஸ்டாலின் விளக்கம்

SCROLL FOR NEXT