திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் வே. விஷ்ணு பேட்டி. உடன் பாளையங்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினர் அப்துல் வகாப் உள்ளார். 
தமிழ்நாடு

பள்ளி விபத்துக்கு காரணம் என்ன? நெல்லை ஆட்சியர் விளக்கம்

திருநெல்வேலியில் உள்ள சாஃப்டர் பள்ளியில் இன்று காலை சுவர் இடிந்து விழுந்ததில் 3 மாணவர்கள் பலியானது குறித்து மாவட்ட ஆட்சியர் வே. விஷ்ணு பேட்டியளித்துள்ளார்.

DIN

திருநெல்வேலியில் உள்ள சாஃப்டர் பள்ளியில் இன்று காலை சுவர் இடிந்து விழுந்ததில் 3 மாணவர்கள் பலியானது குறித்து மாவட்ட ஆட்சியர் வே. விஷ்ணு பேட்டியளித்துள்ளார்.

விபத்து குறித்து மாவட்ட ஆட்சியர் கூறியதாவது:

திருநெல்வேலி சாஃப்டர் மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை காலை 11 மணியளவில் இடைவேளையின்போது மாணவர்கள் சிறுநீர் கழிக்கச் சென்றபோது, கழிப்பறை கட்டடத்தின் முன்பக்க சுவர் இடிந்து விழுந்ததில் 7 மாணவர்கள் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர்.

இதில் 3 மாணவர்கள் உயிரிழந்தனர். காயமடைந்த 4 மாணவர்கள் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. அவர்கள் 4 பேரும் நலமாக உள்ளனர்.

இந்த விபத்துக்கான காரணம் குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் மூலமாக முதற்கட்ட ஆய்வு செய்யப்பட்டது. அதில், கழிவறையின் முன்பக்க சுவரை அடித்தளம் இல்லாமல் கட்டியதே சுவர் இடிந்ததற்கான காரணம் என தெரியவந்துள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியார் மற்றும் அரசுப் பள்ளிகளையும் ஆய்வு செய்ய சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் குழு அடுத்த 48 மணி நேரத்தில் அனைத்து பள்ளிகளையும் ஆய்வு செய்யும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நியூயார்க் மேயராக முதல் இந்திய வம்சாவளி தேர்வு! யார் இவர்?

பாமக எம்எல்ஏ அருள் மீது தாக்குதல்! 20 பேர் மீது வழக்கு!

துணிச்சல் அதிகரிக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

SCROLL FOR NEXT