முகப்பு
தமிழ்நாடு

தமிழகத்தில் மேலும் 613 பேருக்கு கரோனா தொற்று

தமிழகத்தில் இன்று மேலும் 613 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:43 AM
தமிழகத்தில் மேலும் 613 பேருக்கு கரோனா தொற்று
பகிர்:

தமிழகத்தில் இன்று மேலும் 613 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 

மாநிலத்தில் இன்று ஒருநாளில் மட்டும் 1 லட்சத்தும் மேற்பட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இன்று வெளியான பரிசோதனை முடிவுகளில் அதிகபட்சமாக சென்னையில் 125 பேருக்கும், கோவையில் 101 பேருக்கும், ஈரோட்டில் 46 பேருக்கும் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

இதனிடையே, கரோனா தொற்றிலிருந்து மேலும் 665 போ் விடுபட்டு வீடு திரும்பியுள்ளனா். இதன் மூலம் இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 26,95,174ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கரோனா பாதிப்புக்குள்ளாகி மேலும் 9 போ் பலியாகியதை அடுத்து நோய்த் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 36,676-ஆக அதிகரித்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →