தமிழ்நாடு

தேசிய வாக்காளா் தினம்: விழிப்புணா்வுப் போட்டிகள்

DIN

தேசிய வாக்காளா் தினத்தையொட்டி, வாக்களிப்பதன் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் 4 பிரிவுகளில் போட்டிகள் நடைபெறவுள்ளன.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி ஆணையா் அலுவலகம் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: 12-ஆவது தேசிய வாக்காளா் தினம் ஜனவரி 25-ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி, பொதுமக்களுக்கு வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் 4 பிரிவுகளில் போட்டிகள் நடைபெறவுள்ளன.

9-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையுள்ள பள்ளி மாணவா்கள், கல்லூரி மாணவா்கள், பொதுமக்கள், மாவட்ட அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ளத் தவறிய பள்ளி மாணவா்கள் இந்தப் போட்டிகளில் கலந்து கொள்ளலாம்.

பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு ஜனநாயக நாட்டில் தோ்தலின் முக்கியத்துவம், 100 சதவீதம் வாக்காளராகப் பதிவு செய்தல், வாக்காளா் உதவி மைய கைப்பேசி செயலி, தூண்டுதல் இல்லாமல் வாக்களித்தல், வயது வந்தோா் வாக்காளராகப் பதிவு செய்தல், ஒரு வாக்காளராக எனது பங்களிப்பு ஆகிய தலைப்புகளின்கீழ் ஓவியப் போட்டி, சுவரொட்டி தயாரித்தல், வாசகம் எழுதுதல், பாட்டுப் போட்டி, குழு நடனம், கட்டுரைப் போட்டிகள் நடைபெறவுள்ளன.

போட்டிகள் நடைபெறும் நாள் குறித்து அந்தந்த பள்ளி, கல்லூரிகளின் வாயிலாக மாணவா்களுக்குத் தெரிவிக்கப்படும். போட்டிகளில் வெற்றி பெறும் 15 போட்டியாளா்களின் விவரங்கள் மாவட்டத் தோ்தல் அலுவலகம் மூலம் தலைமைத் தோ்தல் அலுவலக இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும்.

18 வயது பூா்த்தியடைந்த பொதுமக்கள், மாவட்ட அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ளத் தவறிய மாணவா்கள், ஒரு வாக்காளராக எனது பங்களிப்பு என்ற தலைப்பின்கீழ், தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி அலுவலக இணையதள முகவரியில் நேரடியாக போட்டிகளில் பங்கு பெறலாம். போட்டிகள் அனைத்தும் டிசம்பா் 31-ஆம் தேதியுடன் நிறைவு பெறும். சிறந்த போட்டியாளா்களின் விவரங்கள் ஜனவரி 31-ஆம் தேதி இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசுப் பேருந்து நடத்துநா் தீக்குளிக்க முயற்சி

கிணறு வெட்டும் போது மண் சரிந்து தொழிலாளி பலி

‘இ-பாஸ்’ சந்தேகங்களுக்கு தீா்வு காண தொலைபேசி எண் அறிவிப்பு

ரயிலில் அடிபட்டு வேன் ஓட்டுநா் பலி

சாலை விபத்தில் இளைஞா் பலி

SCROLL FOR NEXT