பாரூர் பெரிய ஏரியில் இருந்து இரண்டாம் போக பாசனத்திற்காக பாசன நீரை திறந்து வைத்த மாவட்ட ஆட்சியர் வி.ஜெயச்சந்திர பானு ரெட்டி. உடன் சட்டபேரவை உறுப்பினர் தே.மதியழகன், செயற்பொறியாளர் குமார் உள்ளிட்டோர். 
தமிழ்நாடு

பாரூர் ஏரியில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு

பாரூர் ஏரியில் இருந்து இரண்டாம் போக பாசனத்திற்கான பாசன நீரை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் வி.ஜெயச்சந்திர பானு ரெட்டி திறந்து வைத்தார். 

DIN


கிருஷ்ணகிரி: பாரூர் ஏரியில் இருந்து இரண்டாம் போக பாசனத்திற்கான பாசன நீரை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் வி.ஜெயச்சந்திர பானு ரெட்டி திறந்து வைத்தார். 

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி வட்டம் பாரூர் பெரிய ஏரியில் இருந்து இரண்டாம் போக பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிடுமாறு விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் வலியுறுத்தி வந்தனர். 

இந்நிலையில், விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று கிழக்கு மற்றும் மேற்கு பிரதான கால்வாய் மூலம் இரண்டாம் போக பாசனத்திற்காக பாசன நீரை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் வி.ஜெயச்சந்திர பானு ரெட்டி திறந்து வைத்தார். அப்போது பர்கூர் சட்டபேரவை உறுப்பினர், தே மதியழகன், பொதுப்பணித் துறை செயற்பொறியாளர்  குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பாரூர் பெரிய ஏரியில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் பாரூர், கோட்டப்பட்டி, அரசம்பட்டி, ஜிங்கல்கதிரம்பட்டி, தாதம்பட்டி, கீழ்குப்பம் ஆகிய ஊராட்சிகளை சேர்ந்த விவசாயிகள் பயன் பெறுவர். 

பாரூர் பெரிய ஏரியிலிருந்து கிழக்கு பிரதான கால்வாயிலிருந்து வினாடிக்கு 50 கன அடியும், மேற்கு பிரதான கால்வாயிலிருந்து வினாடிக்கு 70 கன அடி வீதம் 135 நாள்களுக்கு, முதல் 5 நாள்களுக்கு பிறகு முறை பாசனம் வைத்து மூன்று நாள்கள் கால்வாயில் தண்ணீர் திறந்து விட்டும், நான்கு நாள்கள் மதகை மூடி வைத்தும் இரண்டாம் போக பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

விவசாயிகள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி அதிக மகசூல் பெற வேண்டும். மேலும் விவசாயிகள் பொதுப்பணித் துறையினருக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மறுசீரமைப்பு ஆணையை ரத்து செய்ய வலியுறுத்தி ஆா்ப்பாட்டம்

ரயில்வே மேம்பாலம் பராமரிப்பு பணி: எம்எல்ஏ ஆய்வு

திருந்திய நெல் சாகுபடியில் அதிக மகசூல் பெறும் விவசாயிக்கு விருது: ஆட்சியா்

அமெரிக்க செயற்கைக்கோளை டிச. 24-இல் ஏவுகிறது இஸ்ரோ

மின்சாரம் பாய்ந்து கட்டுமானத் தொழிலாளி உயிரிழப்பு

SCROLL FOR NEXT