கம்பம் சுருளிப்பட்டி சாலையில் வீட்டின் மீது விழுந்த 100 ஆண்டுகளுக்கும் மேலான பழமை வாய்ந்த வேப்ப மரம் 
தமிழ்நாடு

கம்பத்தில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த வேப்ப மரம் வீட்டின் மீது விழுந்து உயிர் தப்பிய மூதாட்டி!

தேனி மாவட்டம், கம்பம் சுருளிப்பட்டி சாலையில் 100 ஆண்டுகளுக்கும் மேலான பழமை வாய்ந்த வேப்ப மரம் வீட்டின் மீது விழுந்ததால் வீடு இடிந்தது, வீட்டில் இருந்த 70 வயது மூதாட்டி  உயிர் தப்பினார்.

DIN


கம்பம்: தேனி மாவட்டம், கம்பம் சுருளிப்பட்டி சாலையில் 100 ஆண்டுகளுக்கும் மேலான பழமை வாய்ந்த வேப்ப மரம் வீட்டின் மீது விழுந்ததால் வீடு இடிந்தது, வீட்டில் இருந்த 70 வயது மூதாட்டி  உயிர் தப்பினார்.

தேனி மாவட்டம், கம்பம் சுருளிப்பட்டி சாலையில் இருபுறமும் நெருக்கமாக வீடுகள் கட்டப்பட்டு உள்ளது.

சனிக்கிழமை இரவு சுமார் 11:30 மணியளவில் பழைய அக்ரஹாரத் தெரு நுழைவாயிலில் மீனா(70), என்ற மூதாட்டி வசிக்கிறார்.

இவர் வீட்டின் பின்புறம் 100 ஆண்டுகளுக்கும் மேலான பழமையான வேப்பமரம் உள்ளது, திடீரென்று மரம் வீட்டின் மீது விழுந்து வீடு இடிந்தது, மரத்தின் அருகில் உயர் அழுத்த மின் கம்பிகள் சென்றதால் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டது, இதனால் 3 மின் கம்பங்கள் உடைந்தது.

வீடு இடிந்து விழுந்த சத்தம் கேட்டு அருகில் உள்ளவர்கள் சென்று பார்த்தபோது வீட்டின் இடிபாடுகளுக்குள் சிக்கி மூதாட்டி அலறினார்.

அருகே உள்ளவர்கள் அவரை மீட்டு கம்பம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

உயிர் தப்பிய மூதாட்டி மீனா(70)

ஞாயிற்றுக்கிழமை காலையில் மின்சார வாரியத்தின் சேதமடைந்த மின்சார கம்பங்களை அகற்றி, மின் வயர்களை இணைத்து, வருகின்றனர்.

வீடு இடிந்தது மற்றும் மின் கம்பங்கள் சேதம் ஆகியவற்றை பார்வையிட்ட நகராட்சி ஆணையாளர் எம். சரவணகுமார், பெரும் விபத்து ஏற்படுவதற்கு முன் சாலையின் இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்பு வீடுகளை அப்புறப்படுத்தினால் தான் விபத்துக்கள் ஏற்படாது என்று தெரிவித்தார்.

விபத்திற்கு காரணம்:
கம்பம் சுருளிப்பட்டி செல்லும் சாலையின் இருபுறமும் வடிகால்கள் மீது வீடுகள் ஆக்கிரமித்து கட்டப்பட்டு உள்ளது. சுமார் 60 ஆண்டுகளுக்கு மேல் அந்த பகுதியில் வீடுகள் உள்ளது, இதனால் சாக்கடை தண்ணீர் செல்ல முடியாத நிலையிலும் மேலும் வீட்டின் பின்புறம் வயது முதிர்ந்த வேம்பு மற்றும் புளியமரங்கள் உள்ளது.

தற்போது கடந்த சில நாள்களுக்கு முன்பு பெய்த தொடர் மழையால், மரங்கள் பிடிப்பு இல்லாமல் உள்ளது, மேலும் வீட்டு மண் சுவர்களும் பிடிப்பு இல்லாமலும், சாக்கடை வடிகால்களில் மழை வெள்ளம் சென்று சேதமடைந்தும் உள்ளது.

ஆக்கிரமிப்புகள் இருப்பதால் சாக்கடை நீர் செல்லும் வடிகால் சுத்தம் செய்ய முடியவில்லை, இதனால் மண் அரிப்பு ஏற்பட்டு பழமையான வேப்பமரம்  விழுந்திருக்கும் என்று அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர்.

தொடர்ந்து இருபுறமும் உள்ள மரங்கள் முறிந்து விழும் அபாயமும் உள்ளது, ஆக்கிரமிப்புகளை அகற்றினால் மட்டுமே போக்குவரத்து நெரிசல் சீராவதோடு பெரும் விபத்துக்கள் ஏற்படுவது தவிர்க்கப்படும் என்று அந்த பகுதி வாசி ஒருவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருவள்ளூரில் பரவலாக மழை

தேனீக்கள் கொட்டியதில் 20-க்கும் மேற்பட்டோா் காயம்

’வன்னியா் சங்க கட்டடம் இப்போதுள்ள நிலையே தொடரலாம்’: உச்சநீதிமன்றம் உத்தரவு

பூட்டிய வீட்டில் நகைகள், வெள்ளிப் பொருள்கள் திருட்டு

அரசுப் பேருந்து சேதம்: இளைஞா் கைது

SCROLL FOR NEXT