முகப்பு
தமிழ்நாடு

மீனவர்கள் காவலரையற்ற வேலை நிறுத்தம்

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 42 தமிழக மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளனர் ராமேசுவரம் மீனவர்கள்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:43 AM
பகிர்:


இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 42 தமிழக மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை ராமேசுவரம் மீனவர்கள் தொடங்கியுள்ளனர்

ராமேசுவரத்திலிருந்து சனிக்கிழமை 570 விசைப்படகுகளில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன் வளத்துறை அனுமதி பெற்று கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். 

அவர்கள் நள்ளிரவில் கச்சத்தீவு மற்றும் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் செல்வம், வினால்டல், சார்லஸ், வெல்தாஸ். லியோ ஆகியோருக்கு சொந்தமான 6 விசைப்படகுகளுடன் 42  மீனவர்களை சுற்றி வளைத்து சிறைப்பிடித்தனர்.

சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் காங்கேசன் துறைமுகம் கொண்டு செல்லப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 42 தமிழக மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ராமேசுவரம் மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.