தமிழ்நாடு

முதல்வரின் காப்பீடு திட்டம்: வருமான வரம்பு ரூ.1.20 லட்சமாக உயர்வு

DIN

முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்ட பயனாளிகளுக்கான வருமான வரம்பு ரூ.1.20 லட்சமாக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இதற்கு முன்பு முதல்வரின் காப்பீடு திட்ட ஆண்டு வருமான வரம்பு ரூ.72,000 ஆயிரமாக இருந்த நிலையில், தற்போது ரூ.1.20 லட்சமாக தமிழக அரசு உயர்த்தியுள்ளது.

மருத்துவ காப்பீட்டிற்கான தவணைத் தொகையாக இந்த ஆண்டிற்கு மட்டும் ரூ.1,248.29 கோடி ஏற்கெனவே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

2009-ஆம் ஆண்டு ஜூலை மாதம் உயர் ரக மருத்துவ சிகிச்சைக்கான கலைஞர் காப்பீடு திட்டம் என்ற முதல்வரின் மருத்துவ காப்பீடு திட்டம் உருவாக்கப்பட்டது. இந்தத் திட்டமானது, 51 வகையான நோய்களுக்கு,  5 லட்ச ரூபாய் வரையிலான உயர் மருத்துவ சிகிச்சைகளை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இலவசமாக பெற வழிவகை செய்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புன்னகை பூ... ஷ்ரத்தா தாஸ்!

சிவகார்த்திகேயன் சொத்து மதிப்பு இவ்வளவா?

பார்வை ஒன்று போதுமே... சாக்ஷி அகர்வால்!

கண் பேசும் வார்த்தை... அதிதி ஷங்கர்!

டி20 உலகக் கோப்பைக்கான ஜாகீர் கானின் இந்திய அணியை தெரிந்து கொள்ள வேண்டுமா?

SCROLL FOR NEXT