பொள்ளாச்சி பாலியல் வழக்கு விசாரணை ஒத்திவைப்பு 
தமிழ்நாடு

பொள்ளாச்சி பாலியல் வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

பொள்ளாச்சி பாலியல் வழக்கு விசாரணையை டிச.29-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது கோவை மாவட்ட மகளிர் நீதிமன்றம்.

DIN

பொள்ளாச்சி பாலியல் வழக்கு விசாரணையை டிச.29-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது கோவை மாவட்ட மகளிர் நீதிமன்றம்.

கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள் உள்பட இளம்பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து விடியோ எடுத்து பணம் பறித்ததாக திருநாவுக்கரசு, சபரிராஜன், வசந்தகுமாா், சதீஷ், மணிவண்ணன் உள்ளிட்டோா் கைது செய்யப்பட்டனா்.

சிபிசிஐடி விசாரித்த இந்த வழக்கு பின்னா் சிபிஐக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து பொள்ளாச்சி அதிமுக நகர மாணவரணி செயலாளராக இருந்த அருளானந்தம், ஹேரன்பால், பாபு என்கிற பைக் பாபு உள்ளிட்டோா் கைது செய்யப்பட்டனா். இவா்கள் அனைவரும் சேலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா்.

இந்த வழக்கு கோவை மாவட்ட மகளிா் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த வழக்கில் பொள்ளாச்சி, கிட்டசூரம்பாளையம் பகுதியைச் சோ்ந்த அருண்குமாரை சிபிஐ அதிகாரிகள் ஆகஸ்ட் மாதம் கைது செய்தனா். இவரும் சேலம் சிறையில் அடைக்கப்பட்டிருந்தாா்.

இந்நிலையில் 9 பேரும் கோவை மகளிா் நீதிமன்றத்தில் காணொலிக் காட்சி மூலம் இன்று ஆஜா்படுத்தப்பட்டனா். வழக்கை விசாரித்த நீதிபதி, விசாரணையை டிச. 29ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாக உத்தரவிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடக்கம்!

ஜனநாயகன் இசைவெளியீடு! இந்திய சினிமாவில் முதல்முறை! | Cinema Updates | Dinamani Talkies

வித் லவ் பாடல் புரோமோ!

விபி - ஜி ராம் ஜி மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்!

ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு! கார்கள் மீது மோதிய லாரி! | CBE

SCROLL FOR NEXT