தமிழ்நாடு

பொங்கல் பண்டிகையையொட்டி 16,768 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்: அமைச்சர் தகவல்

DIN

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 16,768 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் தெரிவித்துள்ளார். 

இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது: 

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 16,768 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. 

சென்னையில் இருந்து கோயம்பேடு, தாம்பரம், மாதவரம், கே.கே. நகர், பூந்தமல்லி, தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிறுத்தம் ஆகிய 5 பேருந்து நிலையங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்படும். மேலும் கோயம்பேட்டில் இருந்து பிற பேருந்து நிலையங்களுக்குச் செல்ல இணைப்புப் பேருந்துகள் இயக்கப்படும். 

ஜனவரி 11 முதல் 13 வரை சென்னையில் இருந்து 10,300 பேருந்துகளும் பிற ஊர்களில் இருந்து 6,468 பேருந்துகளும் இயக்கப்படும். 

அதுபோல சொந்த ஊர்களில் இருந்து சென்னை திரும்ப வசதியாக ஜனவரி 16 முதல் 18 வரை சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும். 

பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும். நெடுஞ்சாலை மோட்டல்கள் மோசமாக இருப்பதாக தகவல்கள் வருகின்றன. அதுகுறித்து புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேசிய கட்சிகளின் ஆதிக்கத்தில் கோவா!

அமேதி, ரேபரேலி: அமைதி காக்கும் காங்கிரஸ்!

அல்கராஸுக்கு அதிா்ச்சி அளித்த ரூபலேவ்

சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீபுரந்தீஸ்வரா்

தேய்பிறை அஷ்டமி வழிபாடு

SCROLL FOR NEXT