தமிழ்நாடு

முன்னாள் அமைச்சர் தங்கமணி தொடர்புடைய இடங்களில் மீண்டும் சோதனை

DIN

அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை சேர்ந்த முன்னாள் அமைச்சர் கே.தங்கமணிக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் திங்கள்கிழமை மீண்டும் சோதனை நடத்தி வருகின்றனர்.

வருமானத்துக்கு அதிகமான சொத்து சேர்த்ததாக முன்னாள் அமைச்சர் தங்கமணி மற்றும் அவரது மனைவி, மகன் மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதையடுத்து பதவி காலத்தில் சுமார் 4 கோடி ரூபாய் அளவுக்கு வருமானம் சேர்த்தாக கூறி லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் 69 இடங்களில் கடந்த நவம்பர் 15ஆம் தேதி சோதனையில் ஈடுபட்டதில், ரூ.2.16 கோடி ரொக்கம், ஆவணங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில், சோதனையில் கிடைக்கப்பெற்ற ஆவணங்களில் அடிப்படையில் இன்று மீண்டும் ஈரோட்டில் 3 இடங்களில் காலை முதலே லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஈரோடு சாந்தங்காடு பகுதியிலுள்ள தங்கமணி உறவினர்  குமார் என்கின்ற கோபாலகிருஷ்ணன்  என்பவருடைய வீட்டிலும், ஓண்டிக்காரன் பாளையத்திலுள்ள தங்கமணியின் மகன் தரணிதரனின் கல்லூரி நண்பர் செந்தில்நாதன் வீடு மற்றும் திண்டல் சக்தி நகரிலுள்ள பாலசுந்தரம் என்பவருடைய வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 3 இடங்களில் நடைபெற்று சோதனையில் 20க்கும் மேற்பட்ட காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், நாமக்கல்லில் 4, சேலத்தில் ஒரு இடத்திலும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பூமியை நெருங்கும் எரிகற்கள்: எச்சரிக்கும் நாசா! என்ன நடக்கும்?

அழகிய தமிழ்மகள்...!

சுற்றுலா சென்ற மாணவர்களுக்கு நேர்ந்த சோகம்: 5 பேர் பலி!

கூலி டீசர்- இளையராஜா காப்புரிமை விவகாரம்: ரஜினி கூறியது என்ன?

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகள் சீரமைப்பு

SCROLL FOR NEXT