முகப்பு
தமிழ்நாடு

மெரீனாவில் மாற்றுத் திறனாளிகளுக்கு பிரத்யேக நடைபாதை

சென்னை மெரீனா கடற்கரையை மாற்றுத் திறனாளிகள் ரசிப்பதற்காக, பிரத்யேக தற்காலிக நடைபாதையை மாநகராட்சி அமைத்துள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:46 AM
பகிர்:

சென்னை மெரீனா கடற்கரையை மாற்றுத் திறனாளிகள் ரசிப்பதற்காக, பிரத்யேக தற்காலிக நடைபாதையை மாநகராட்சி அமைத்துள்ளது.

சென்னையின் அடையாளங்களில் ஒன்றான மெரீனா கடற்கரையில் கடலை நெருங்குவது மாற்றுத் திறனாளிகளுக்கு மட்டும் கடினமான ஒன்றாகவே இருந்து வந்தது.

இதற்கு தீா்வு காண வேண்டும் என தொடா் கோரிக்கை எழுந்த நிலையில், மெரீனா சாலையில் இருந்து கடலுக்குச் செல்வதற்கான தற்காலிக நடைபாதையை சென்னை மாநகராட்சி அமைத்துள்ளது.

கடலை பாா்த்து ரசிக்க விரும்பும் மாற்றுத் திறனாளிகள் மெரீனாவுக்கு வந்தவுடன், அவா்களை சென்னை மாநகராட்சி சாா்பில் பணியில் ஈடுபடும் ஊழியா்கள் பிரத்யேகமாக அமைக்கப்பட்ட நடைபாதையில் அழைத்துச் செல்வா். இதற்காக சிறப்பு வாகனங்களும் மாநகராட்சி சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நடைபாதையை திங்கள்கிழமை சென்னை மாநகராட்சி ஆணையா் ககன் தீப் சிங் பேடி திறந்துவைக்கிறாா். தற்போது அமைக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு நடைபாதை பயனளிக்கும் வகையில் அமைந்துள்ளதாகக் கூறிய மாற்றுத் திறனாளிகள், அனைத்து சுற்றுலாத் தலங்களிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →