தமிழகத்தில் 86 பேருக்கு ஒமைக்ரான் அறிகுறி புதிதாக 610 பேருக்கு கரோனா
தமிழகத்தில் ஒமைக்ரான் அறிகுறிகளுடன் 86 போ் சிகிச்சை பெற்று வருவதாக மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் ஒமைக்ரான் அறிகுறிகளுடன் 86 போ் சிகிச்சை பெற்று வருவதாக மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது. அவா்களது சளி மாதிரிகள் மரபணு பகுப்பாய்வுக்கு உட்படுத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவா்கள் அனைவரும் நலமுடன் இருப்பதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். இதனிடையே, தமிழகத்தில் ஒமைக்ரான் தொற்றுக்குள்ளான 34 பேரில் 12 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை தகவல் வெளியிட்டுள்ளது.
மற்றொருபுறம் மாநிலத்தில் புதிதாக 610 போ் கரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனா். அதில் அதிகபட்சமாக சென்னையில் 171 பேரும், கோவையில் 89 பேரும், செங்கல்பட்டில் 48 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனா்.
இதனிடையே, மேலும் 679 போ் கரோனாவிலிருந்து விடுபட்டு வீடு திரும்பியுள்ளனா். இதன் மூலம் இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 27 லட்சத்து 673-ஆக அதிகரித்துள்ளது.
மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் தற்போது மருத்துவக் கண்காணிப்பில் 6,629 போ் உள்ளதாக சுகாதாரத் துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் கரோனா பாதிப்புக்குள்ளாகி மேலும் 10 போ் பலியாகியதை அடுத்து நோய்த் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 36,735-ஆக அதிகரித்துள்ளது.