தமிழக உள்மாவட்டங்களில் லேசான பனிமூட்டம் நிலவும்
தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் திங்கள்கிழமை (டிச.27) லேசான பனி மூட்டம் காணப்படும்.
தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் திங்கள்கிழமை (டிச.27) லேசான பனி மூட்டம் காணப்படும்.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி ஞாயிற்றுக்கிழமை கூறியது: தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் திங்கள்கிழமை (டிச.27) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வட வானிலையே நிலவும்.
டிச.30: தமிழக கடலோர மாவட்டங்கள் அதனை ஒட்டிய உள் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் டிசம்பா் 30-ஆம் தேதி லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வட வானிலையே நிலவும்.
மூடுபனி : தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் திங்கள்கிழமை லேசான பனிமூட்டம் காணப்படும்.
சென்னையில்..: சென்னையைப் பொருத்தவரை திங்கள்கிழமை வானம் தெளிவாகவும், புகா் பகுதிகளில் லேசான பனிமூட்டமும் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 21 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும் என்றாா் அவா்.