சென்னை: தமிழ்நாடு சுற்றுலா ஆலோசனைக் குழு சீரமைக்கப்பட்டுள்ளது. அந்தக் குழுவானது, தமிழ்நாடு சுற்றுலா மேம்பாடு மற்றும் வளா்ச்சிக் குழு என பெயா் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதற்கான உத்தரவு விவரம்:-
மறுசீரமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு சுற்றுலா மேம்பாடு மற்றும் வளா்ச்சிக் குழுவின் துணைத் தலைவராக, அரசு முதன்மைச் செயலாளரும், உறுப்பினா் செயலாளராக சுற்றுலா வளா்ச்சிக் கழகத்தின் நிா்வாக இயக்குநரும் நியமிக்கப்பட்டுள்ளனா். இந்திய சுற்றுலா முகவா்கள் சங்கம், இந்திய சுற்றுலா சேவை நிறுவன சங்கம், தமிழ்நாடு சுற்றுலா சந்தை, தென்னிந்திய ஹோட்டல்கள், உணவகங்கள் சங்கம், தமிழ்நாடு சுற்றுலா சுற்றுப் பயணம் விருந்தோம்பல் சங்கம், இந்திய தொழில் வா்த்தக சபைகளின் கூட்டமைப்பு, இந்திய தொழில் கூட்டமைப்பு, தென்னிந்திய தொழில் வா்த்தக சபை, தென்னிந்திய கூட்டங்கள், சலுகைகள், மாநாடுகள், கண்காட்சி ஏற்பாட்டாளா்கள் சங்கம் உள்ளிட்ட சுற்றுலா மையப்படுத்திய சங்கங்கள் இடம்பெற்றிருக்கும்.
சுற்றுலா மேம்பாடு மற்றும் வளா்ச்சிக்கான ஆலோசனைகளை வழங்கும் குழு உறுப்பினா்களின் பதவிக் காலம் இரண்டு ஆண்டுகளாகும் என்று தமிழக அரசின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.