தமிழ்நாடு

புத்தாண்டு அன்று கோயில்களில் நள்ளிரவு சாமி தரிசனத்திற்கு தடையில்லை: அமைச்சர் சேகர் பாபு பேட்டி

புத்தாண்டையொட்டி பக்தர்கள் நள்ளிரவு சாமி தரிசனத்திற்கு தடையில்லை என இந்து சமய நலத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

DIN


சென்னை: புத்தாண்டையொட்டி பக்தர்கள் நள்ளிரவு சாமி தரிசனத்திற்கு தடையில்லை என இந்து சமய நலத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

புத்தாண்டு கொண்டத்திற்கு தமிழகத்தில் பல்வேறு தடைகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், புத்தாண்டு அன்று நள்ளிரவு கோயில்களில் சாமி தரிசனத்திற்கு தடையில்லை. 

மேலும் அரசு அறிவுறுத்தியுள்ள நோய்த்தடுப்பு முறைகளான தனி மனித இடைவெளி, முகக்கவசம் போன்ற விதிமுறைகளை மக்கள் கட்டயாம் பின்பற்றி சாமி தரிசனம் செய்ய வேண்டும்.

நாடு நலம் பெற, மக்கள் வளம் பெற வருகின்ற ஆண்டு நல்லாண்டாக அமைவதற்கு கோயில்களில் சாமி தரிசனத்திற்கு செல்பவர்கள் நோய்த்தொற்றுக்கு ஆளாகாமல் இருப்பதற்கான  அனைத்து பாதுகாப்பு வழிமுறைகளையும் பின்பற்ற வேண்டும் என அமைச்சர் சேகர்பாபு வலியுறுத்தியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வீரப்பன் தேடுதல் வேட்டை: இழப்பீடு தொகை அரசு பணம் அல்ல; மக்கள் பணம்: உயர் நீதிமன்றம்

கண்களால் கைது செய்... ஆசியா பேகம்!

கிஸ் படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

பிகாரில் காட்டாட்சியைத் தடுக்க தாமரை சின்னத்துக்கு வாக்களியுங்கள்: அமித் ஷா

திமுக-வில் இணைந்தார் அதிமுக எம்எல்ஏ மனோஜ் பாண்டியன்! | DMK | ADMK

SCROLL FOR NEXT