தமிழ்நாடு

மீண்டும் கட்டுப்பாடுகள்? முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை

DIN

தமிழகத்தில் மீண்டும் கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.

ஒமைக்ரான் வகை கரோனா பாதிப்பு நாடு முழுவதும் வேகமாக பரவி வரும் சூழலில், கட்டுபாடுகளை தீவிரப்படுத்த மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றது.

நேற்று மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் அனுப்பிய கடிதத்தில், சென்னையில் தொடர்ந்து கரோனா அதிகரிப்பதால் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என மாநில அரசை வலியுறுத்தியிருந்தார்.

இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலாளர்கள் இறையன்பு, சுகாதாரத்துறை செயலாளர்கள் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதில், இரவுநேர ஊரடங்கு, கூட்டம் கூடும் நிகழ்வுகளுக்கு தடை, பள்ளிகள் செயல்படுவதில் கட்டுப்பாடுகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை செய்யப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து இன்று மாலை புதிய கட்டுப்பாடுகள் குறித்த அறிவிப்பை முதல்வர் ஸ்டாலின் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 பொதுத் தேர்வு: விழுப்புரம் மாவட்டத்தில் 93.17% தேர்ச்சி

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் பெயர் அறிவிப்பு!

கேரளம்: விடுதி கட்டடத்தில் இருந்து குதித்து என்ஐடி மாணவர் தற்கொலை

அனைத்து மாவட்டங்களும் 90%-க்கு மேல் தேர்ச்சி!

தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் எப்போது கிடைக்கும்?

SCROLL FOR NEXT