கும்மிடிப்பூண்டியில் திமுக சார்பில் அண்ணா நினைவு நாள்  விழா 
தமிழ்நாடு

கும்மிடிப்பூண்டியில் திமுக சார்பில் அண்ணா நினைவு நாள்  விழா

கும்மிடிப்பூண்டியில் பேரறிஞர் அண்ணாவின் 52ஆம் நினைவு நாள் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் அனுசரிக்கப்பட்டது.

DIN

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டியில் பேரறிஞர் அண்ணாவின் 52ஆம் நினைவு நாள் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் அனுசரிக்கப்பட்டது.

திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் கும்மிடிப்பூண்டி பேருந்து நிலையத்தில் உள்ள பேரறிஞர் அண்ணாவின் சிலை  முன் நடைபெற்ற அவரது நினைவு நாள் நிகழ்விற்கு மாவட்ட பொறுப்பாளர் டி.ஜெ.கோவிந்தராஜன் தலைமை தாங்கினார்.

நிகழ்விற்கு திமுக பொறுப்பு குழு உறுப்பினர் வழக்கறிஞர் வெங்கடாசலபதி, மாவட்ட கவுன்சிலர் ராமஜெயம், ஒன்றிய துணை செயலாளர் பாஸ்கரன், நகர செயலாளர் அறிவழகன், ஒன்றிய கவுன்சிலர் ஜெயச்சந்திரன், திமுக நிர்வாகிகள் ராகவரெட்டிமேடு ரமேஷ், பரத்குமார், இஸ்மாயில், வெங்கடேசன், முன்னாள் பேருராட்சி தலைவர் கே.என்.பாஸ்கர், சுகு, சுரேஷ் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

தொடர்ந்து திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் டி.ஜெ.கோவிந்தராஜன் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து சிறப்புரை ஆற்றினார்.

தொடர்ந்து திமுகவினர் வருகின்ற சட்டப்பேரவை தேர்தலில் கும்மிடிப்பூண்டி தொகுதியில் திமுகவை வெற்றி பெற செய்து திமுக ஆட்சி அமைக்க உழைப்போம் என உறுதியேற்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

யுசிஎல்: ரியல் மாட்ரிட்காக இளம் வயதில் களமிறங்கி சாதனை! அடுத்த மெஸ்ஸியா?

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 25 காசுகள் உயர்ந்து ரூ.87.84 ஆக நிறைவு!

அண்ணாயிஸத்தை அடிமையிஸமாக்கியவர் இபிஎஸ்: முதல்வர் மு.க. ஸ்டாலின்

மெல்லிசையே.. கௌரி கிஷன்!

கர்ஜனை மொழி கனிமொழி, செயல் வீரர் செந்தில் பாலாஜி: மு.க. ஸ்டாலின் புகழாரம்!

SCROLL FOR NEXT