அண்ணா நினைவுநாள்: காஞ்சிபுரத்தில் அமைச்சர் பெஞ்சமின் மரியாதை
அறிஞர் அண்ணாவின் நினைவுநாளை முன்னிட்டு காஞ்சிபுரத்தில் அண்ணா நினைவு இல்லத்தில் அமைச்சர் பெஞ்ஜமின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அறிஞர் அண்ணாவின் நினைவுநாளை முன்னிட்டு காஞ்சிபுரத்தில் அண்ணா நினைவு இல்லத்தில் அமைச்சர் பெஞ்ஜமின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அறிஞர் அண்ணாவின் பிறந்த ஊரான காஞ்சிபுரத்தில் அவரது இல்லத்தில் அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு தமிழக ஊரக தொழில் துறை அமைச்சர் பா. பெஞ்சமின், ஸ்ரீபெரும்புதூர் எம்எல்ஏ பழனி, காஞ்சிபுரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் தலைவர் வாலாஜாபாத் கணேசன், அண்ணா திமுக மாவட்ட செயலாளர் சோமசுந்தரம், முன்னாள் எம்எல்ஏ மைதிலி திருநாவுக்கரசு, முன்னாள் எம்பி காஞ்சி பன்னீர்செல்வம் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
அண்ணாவின் நினைவு தினம் அரசு விழாவாக கொண்டாடப்படுவதால் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார், மாவட்ட வருவாய் அதிகாரி ஆர். பன்னீர்செல்வம், நகராட்சி ஆணையாளர் மகேஸ்வரி, காஞ்சிபுரம் வட்டாட்சியர் பவானி உள்பட அதிகாரிகள் பலரும் அண்ணாவின் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.