முகப்பு
தமிழ்நாடு

தமிழகத்தில் விரைவில் பயணிகள் ரயில் சேவை: தென்னக ரயில்வே பொது மேலாளர் தகவல்

மத்திய ரயில்வே துறை மற்றும் சுகாதார துறையிடம் அனுமதி பெற்று பயணிகள் ரயில்கள் இயக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என தென்னக ரயில்வே பொது மேலாளர் ஜான் தாமஸ் தெரிவித்துள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:26 PM
தமிழகத்தில் விரைவில் பயணிகள் ரயில் சேவை: தென்னக ரயில்வே பொது மேலாளர் தகவல்
பகிர்:

ஈரோடு: மத்திய ரயில்வே துறை மற்றும் சுகாதார துறையிடம் அனுமதி பெற்று பயணிகள் ரயில்கள் இயக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என தென்னக ரயில்வே பொது மேலாளர் ஜான் தாமஸ் தெரிவித்துள்ளார்.

தென்னக ரயில்வே பொது மேலாளர் ஜான் தாமஸ், ஈரோடு ரயில் நிலைய 3வது பிளாட்பாரத்தில்  உள்ள பயணிகள் காத்திருப்பு அறை முன்பதிவு மையம் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அதன் பின்பு  ஈரோடு ரயில் நிலைய வளாகத்தில் முன்புறம் அமைக்கப்பட்டுள்ள ரயில் மாதிரியை பார்வையிட்ட அவர் சரக்கு ரயில் பெட்டிகளை பிரிக்கும் வகையில் புதிதாக வடிவமைக்கப்பட்ட எலக்ட்ரிக்கல் ரயில் இன்ஜினை கொடியசைத்துத்  துவக்கி வைத்தார். 

ஆய்வின்போது சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் ஸ்ரீனிவாஸ் உட்பட ரயில்வே அலுவலர்கள் இருந்தனர். இதனிடையே செய்தியாளர்களை சந்தித்த தென்னக ரயில்வே பொது மேலாளர் ஜான் தாமஸ், ஆண்டு தோறும் ரயில் நிலையங்களில் ஆய்வு செய்வது வழக்கம்.  அதுபோல்  தற்போதும் ஈரோட்டில்  ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்று காலை தொடங்கிய ஆய்வு மாலையில் திருச்சியில் முடிக்கப்படுகிறது  ரயில்வே துறையில் காலியாக உள்ள பணியிடங்கள் ஆய்வு செய்யப்பட்டு மூன்று மாதத்திற்குள் நிரப்பப்பட நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழகத்தில் கரோனா வைரஸ்  குறைந்து வருகிறது. இதனால் மத்திய ரயில்வே துறை மற்றும் சுகாதார துறையிடம் அனுமதி பெற்று விரைவில்  பயணிகள் ரயில்கள் இயக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் ரயில்களில் பொதுப் பெட்டிகள் விரைவில் இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார்.
 

முழு கட்டுரையைப் படிக்க →