முகப்பு
தமிழ்நாடு

கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட விழுப்புரம் மாவட்ட ஆட்சியர், கூடுதல் ஆட்சியர்

மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக விழுப்புரம் மாவட்ட ஆட்சியர், கூடுதல் ஆட்சியர் கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டனர். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:27 PM
கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை, கூடுதல் ஆட்சியர் ஸ்ரேயா பி சிங்
பகிர்:

மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக விழுப்புரம் மாவட்ட ஆட்சியர், கூடுதல் ஆட்சியர் கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டனர். 

விழுப்புரம் மாவட்டத்தில் அரசு மருத்துவமனை, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் சிறுவந்தாடு ஆரம்ப சுகாதார நிலையம், ராதாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய நான்கு மையங்களில் கடந்த மாதத்திலிருந்து கரோனா தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது.

விழுப்புரம் மாவட்டத்தில் முன் களப்பணியாளர்கள் 10,000 பேர் கரோனா தடுப்பூசிக்கு பதிவு செய்துள்ள நிலையில், புதன்கிழமை வரை 2,200 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இதனை ஊக்கப்படுத்தும் வகையில் வியாழக்கிழமை விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை, கூடுதல் ஆட்சியர் ஸ்ரேயா பி சிங் ஆகியோர் விழுப்புரம் அரசு மருத்துவமனையில் தடுப்பூசி போட்டுக் கொண்டனர். அரசு வழங்கும் தடுப்பூசி பாதுகாப்பானது என்பதை உறுதிப்படுத்தும் வகையில் இவர்கள் தடுப்பூசி போட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.