புற்றுநோய் ஒழிப்பு நம்பிக்கையை உருவாக்குவோம்: ஸ்டாலின்
புற்றுநோயைக் குணப்படுத்தவும் வராமல் தடுக்கவும் முடியும் என்ற நம்பிக்கையையும் விழிப்புணர்வையும் உருவாக்குவோம் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
புற்றுநோயைக் குணப்படுத்தவும் வராமல் தடுக்கவும் முடியும் என்ற நம்பிக்கையையும் விழிப்புணர்வையும் உருவாக்குவோம் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
உலக புற்றுநோய் தினத்தையொட்டி தமிழகம் முழுவதும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
இதனிடையே இது குறித்து சுட்டுரையில் ஸ்டாலின் பதிவிட்டுள்ளதாவது, மனிதகுலத்துக்கான ஆபத்துகளை அறிவியல் - மானுட நேயத்தால் வென்று வந்திருக்கிறது உலகம்.
உலக புற்றுநோய் தினத்தையொட்டி சாந்தா அம்மையார் உள்ளிட்ட உலகளாவிய மருத்துவர்களைப் போற்றுவோம்
புற்றுநோயைக் குணப்படுத்தவும் - வராமல் தடுக்கவும் முடியும் என்ற நம்பிக்கையையும் விழிப்புணர்வையும் உருவாக்குவோம் என்று குறிப்பிட்டுள்ளார்.